கணவரின் இரவு பழக்கங்கள் காரணமாக ‘Sleep Divorce’ பதிவு வைரலாகி பரபரப்பு.!

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் சமீபத்தில் சமூக வலைதளமான மம்ஸ்நெட் (Mumsnet) இல் பகிர்ந்த உருக்கமான பதிவால் இணையம் பரபரப்பாகியுள்ளது.

பெண் தனது கணவரை “என் கணவரை நான் ரொம்ப விரும்புகிறேன், ஆனால் அவருடன் படுக்கையைப் பகிர்வது ஒரு சித்திரவதையாக மாறிவிட்டது” எனத் தொடங்கி, அவரது இரவு நேர பழக்கங்களால் ஏற்பட்ட துயரங்களை விவரித்துள்ளார். தோள்பட்டை வலியால் முழு இரவையும் அவர் புரண்டு படுப்பதும், அதிகப்படியான குறட்டை, தூக்கத்தில் வரும் சத்தங்கள் மற்றும் அடிக்கடி விளக்கைப்போட்டு கழிவறைக்கு செல்லும் பழக்கத்தால் தனது தூக்கமும் உடல் நலமும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், “அதிகாலை 5 மணிக்கே அலாரம் வைக்கப்பட்டு, அதை அணைக்காமல் ‘ஸ்னூஸ்’ செய்பவர். இதனால் பகல் நேரங்களில் வேலை செய்ய முடியாமல் சோர்வடைகிறேன்,” என்று அவர் வேதனை தெரிவித்தார்.

தனித்தனி அறையில் தூங்குவது விவாகரத்திற்கு வழிவகுக்கும் என்ற படிப்புகளை மேற்கொண்டு இருந்தாலும், தூக்கமின்மையால் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதைத் தடுக்க முடியாது என்பதே அவரின் கவலை. “கணவரின் மனதைப் புண்படுத்தாமல் நான் எப்படி ‘Sleep Divorce’ பெறுவது?” என்று கேட்டார்.

இந்த கேள்விக்கு, பல இல்லத்தரசிகள் ஆதரவு தெரிவித்து, “உடல்நலமே முதன்மை. தனி அறைக்கு மாறுவதில் தவறில்லை” என கூறி இருக்கின்றனர்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் விரைவாக பகிரப்பட்டு, நெட்டிசன்கள் இதில் தீவிரமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.