2026: “Life Coach தமிழ்மாறனின்இன்றைய தெளிவு பதிவு.. நீங்கள் தாமதமாகவில்லை.. நீங்கள் இன்னும் முடிவு எடுக்கவில்லை”.!

பலர் வாழ்க்கையில் ஒரு விஷயத்தை அடிக்கடி சொல்கிறார்கள்.
“எனக்கு இப்போ வயசாயிடுச்சு…”
“இப்போ இதை தொடங்குறது ரொம்ப late…”

ஆனால் உண்மை என்ன தெரியுமா?
வாழ்க்கையில் தாமதம் என்பதே இல்லை. முடிவு இல்லாமை தான் இருக்கிறது.

நீங்கள் 20-ல் தொடங்கவில்லை என்றால் பரவாயில்லை.
30-ல் தொடங்கவில்லை என்றாலும் பரவாயில்லை.
40-ல் கூட தொடங்கலாம்.
ஆனால் தொடங்கவே இல்லையென்றால் தான்
வாழ்க்கை நின்று போகும்.
பலர் சரியான நேரம் வரட்டும் என்று காத்திருப்பார்கள்.
ஆனால் வாழ்க்கை ஒரு விஷயத்தை தெளிவாகச் சொல்கிறது.

“The right time never comes.
The right decision does.”

நீங்கள் இன்று இருக்கும் இடம்
உங்கள் முழு வாழ்க்கை அல்ல.
அது ஒரு கட்டம் மட்டுமே.
அந்த கட்டத்திலிருந்து
அடுத்த படிக்கு நகர
ஒரே ஒரு விஷயம் போதும்:
ஒரு நேர்மையான முடிவு.
இனிமேல் என்னை நான் குறைத்து பேசமாட்டேன்.

பயம் இருந்தாலும் முயற்சியை நிறுத்தமாட்டேன்.
மற்றவர்கள் கருத்தை என் வாழ்க்கை திசையாக்க மாட்டேன்.
இந்த மூன்று முடிவுகள்
உங்களை மெதுவாக
வேறொரு மனிதனாக மாற்றும்.
நினைவில் வையுங்கள்.

வாழ்க்கை மாற
ஒரு பெரிய விஷயம் தேவையில்லை.
ஒரு தெளிவான முடிவு போதும்.
அந்த முடிவை
நாளைக்கு தள்ளாதீர்கள்.
இன்று. இப்போதே துவங்குங்கள்..

நீங்கள் தயார் ஆன பிறகு வாழ்க்கை மாறாது. வாழ்க்கை மாற ஆரம்பித்த பிறகே நீங்கள் தயாராகுவீர்கள்.
— Life Coach தமிழ்மாறன்

Class Registration

மேலும் விரிவான விபரங்களுக்கு எனது whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.!