யார் இந்த M.S.மகா மூர்த்தி?? பராசக்தி ஆடியோ லான்ச் நடந்த அதே நேரத்தில் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த 99/66 (NINETY NINE / SIXTY SIX) பட ஆடியோ லான்ச்.!

மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் 99/66 (NINETY NINE / SIXTY SIX) என்னும் ஹாரர் படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் அதே மித்ரா பிக்சர்ஸ் தயாரிப்பின் அடுத்த படமான ஹஸ்கி ஹவுஸ் படத்தின் டீசர் நேற்று வள்ளுவர் கோட்டத்தில் வெளியானது.. எண்ணற்ற பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதில் வெளியான பாடல்களை கேட்டு கண்டு களித்து ரசித்தார்கள்..

இந்த படத்தின் தயாரிப்பு,கதை,திரைக்கதை,வசனம்,இசை,இயக்கம் என அனைத்தையும் மித்ரா பிக்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திரு.M.S.MAHA MOORTHY அவர்கள் மிகச் சிறப்பாக கையாண்டு இருக்கிறார்.. தமிழ் சினிமா இதுவரை பார்க்காத ஒரு வித்தியாசமான களத்தில் இந்த கதை அமைந்திருக்கிறது என அந்தப் படத்தின் நாயகி ரக்ஷிதா மகாலட்சுமி தெரிவித்திருந்தார்..

படத்தில் வெளியான பிள்ளையார் பாடல், கருப்பசாமி பாடல், புத்தர் பாடல் என அனைத்தும் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்திருந்தது. குறிப்பாக யாரு பிள்ளையார் என்ற பாடலில் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் அவர்களின் நடனம் மிக அட்டகாசமாக இருந்தது.. மித்ரா பிக்சர்ஸ் நிறுவனர் இந்த படத்தின் தயாரிப்பாளர் திரு எம் எஸ் மகாமூர்த்தி அவர்களுடைய மனைவியின் பிறந்த நாளும் நேற்று மேடையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக திரை உலகத்தை சார்ந்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு, இயக்குனர் லியாகத்தலிகான், இயக்குனர் பேரரசு,இயக்குனர் உதயக்குமார், இயக்குனர் அகத்தியன்,இயக்குனர் மோகன் ஜி,மற்றும் தொழிலதிபர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், வெளிநாட்டு பிரபலங்கள், தொழிலதிபர்கள் என என்னற்றோர் இந்நிகழ்ச்சியல் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.