BiggBoss Tamil 9 சர்ச்சை: பார்வதியை எச்சரித்த திவ்யா, ரெட் கார்டு கோரிக்கையில் ரசிகர்கள்.!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் BiggBoss Tamil 9 நிகழ்ச்சியில் நடக்கும் கார் டாஸ்க் சம்பவம் சமீபத்திய பரபரப்பை கிளப்பியுள்ளது. நிகழ்ச்சியின் இறுதிக் கட்டத்தில் சாண்ட்ராவை சக போட்டியாளர்களான பார்வதி மற்றும் கம்ருதீன் இணைந்து காரில் இருந்து வெளியே தள்ளிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பெரும் எதிரொலி ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்துக்குப் பிறகு, சாண்ட்ராவின் உடல் நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற போட்டியாளர்கள் மட்டுமல்லாமல், பார்வையாளர்களும் அதிர்ச்சியில் ஆழ்த்தப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, விக்ரம் மற்றும் சபரி கம்ரூதீனை கெட்ட வார்த்தைகளால் கடுமையாக விமர்சித்து அவர் மீது கோபம் வெளிப்படுத்தினர். மேலும் திவ்யா பார்வதியை தனியாக குற்றம் சாட்டி, கடுமையான வார்த்தைகளால் சாடினார்.
திவ்யா கூறியதாவது:
“உன்னை மாதிரி ஒரு பெண்ணை என் வயசுல நான் பார்த்ததே இல்ல. நீ என்னென்ன பண்ணிட்டு வந்திருக்க என நான் வைல்ட் கார்டு எண்ட்ரீல பார்த்துட்டு தான் வந்துருக்கேன். அதெல்லாம் நான் சொல்லக்கூடாதுன்னு இருக்கேன். உங்க அம்மாகிட்ட போய் கேளு. 24 மணி நேரம் இந்த வீட்டுல இருந்து ஒரு கிளாஸ் எடுத்து திருந்தாத நீ, நான் சொன்னா மட்டும் திருந்தவா போற?, எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு. நீ வாயை மூடிட்டு இரு. போடின்னு சொன்னா வாயை உடைச்சிடுவேன். பத்து வருஷம் நீ என்ன பண்ணிட்டு இருந்தேன்னு எனக்கு தெரியும்.”
இவ்வாறு, நிகழ்ச்சியின் காட்சி நடத்தை மற்றும் போட்டியாளர்களின் வரம்பை மீறிய நடவடிக்கைகள் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பலரும் சமூக வலைத்தளங்களில் பார்வதி மற்றும் கம்ருதீன் மீது கடுமையான விமர்சனங்களை பகிர்ந்துள்ளனர்.
இந்த சம்பவம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டி, ஒழுக்கம் மற்றும் சீரான நடத்தை தொடர்பான கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.
