BB9: “நான் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்லப்போகிறேன்” – பிரஜின் சான்ட்ரா கார் டாஸ்க் சம்பவத்தை உருக்கமாக கூறினார்.!
BiggBoss Tamil 9 நிகழ்ச்சியில் சான்ட்ராவுக்கு நடைபெற்ற அநீதியான கார் டாஸ்க் நிகழ்வை நடிகர் பிரஜின் கடுமையாக கண்டித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது, தற்போது “டிக்கெட் டூ ஃபினாலி” டாஸ்க் நடைபெற்று வருகிறது.
இந்த டாஸ்கில் பங்குபெற்ற போட்டியாளர்கள்: பார்வதி, கம்ரூதின், சான்ட்ரா, சபரி நாதன், அரோரா, சுபிக்ஷா, வினோத், விக்ரம், திவ்யா ஆகியோர். இதில், பார்வதி மற்றும் கம்ரூதின் இணைந்து சான்ட்ராவை காரில் இருந்து தள்ளி விட்டனர், இதனால் சான்ட்ராவின் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
சான்ட்ராவின் கணவர் பிரஜின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியது:
“என்னுடைய மனைவி சான்ட்ராவை காரில் இருந்து வெளியே பார்வதியும், கம்ருதினும் தள்ளினர். அதைப் பார்த்ததும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. கம்ருதின், பார்வதி தவறு செய்திருந்தால் உரிய தண்டனை இந்த வாரம் கொடுக்கப்படும். மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு நான் செல்லப் போகிறேன். நான் உள்ளே போகும்போது கம்ருதீன் இருந்தார் என்றால் அது அவருக்கு கெட்ட நேரம். இல்லாவிட்டால் நல்ல நேரம். இதை ஒரு வார்னிங்காக கூட இருக்கலாம்.”
பிரஜின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் பின்னர் தனது புதிய திரைப்பட ஒப்பந்தங்களை எதிர்பார்த்தும், நிகழ்ச்சியில் நடந்த சம்பவங்கள் குறித்து தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், பிக்பாஸ் 9வது சீசனில் யார் வெற்றி பெறுவார் என்பது இன்னும் புதிராக உள்ளது. டிக்கெட் டூ ஃபினாலி டாஸ்கில் அரோரா வெற்றி பெறுவார் என நம்பவில்லை, அதனை பார்வதி அல்லது சான்ட்ரா வென்றிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை கிளப்பி, ரசிகர்கள் மற்றும் ரசிகைகளிடையே பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
