40 நாட்கள் அதிர்ஷ்டம் உச்சம்… ருச்சக ராஜயோகத்தில் லாபம் பெறும் 5 ராசிகள்.

ஜோதிட சாஸ்திரப்படி கிரகங்களின் தளபதியாகக் கருதப்படும் செவ்வாய் பகவான், வரும் ஜனவரி 16ஆம் தேதி தனுசு ராசியிலிருந்து தனது உச்ச ராசியான மகர ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சியால் உருவாகும் மிக உயரிய ராஜயோகம் தான் ருச்சக ராஜயோகம்.

செவ்வாய் தனது சொந்த ராசியிலோ அல்லது உச்ச ராசியிலோ கேந்திர ஸ்தானங்களில் அமையும்போது இந்த யோகம் உருவாகும். இந்த ருச்சக ராஜயோகம் பிப்ரவரி 23ஆம் தேதி வரை, சுமார் 40 நாட்கள் நீடிக்கிறது. இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் கை கொடுக்கப்போகும் 5 ராசிகள் எவை என்பதை பார்க்கலாம்.

  1. மேஷம்

மேஷ ராசிக்கு அதிபதி செவ்வாய் என்பதால், இந்த பெயர்ச்சி பத்தாம் இடமான கர்ம ஸ்தானத்தில் நடைபெறுகிறது. வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு உறுதி. தலைமைப் பண்பு வெளிப்படும். அலுவலகத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

  1. கடகம்

கடக ராசிக்கு ஏழாம் இடத்தில் செவ்வாய் அமர்வதால் ருச்சக ராஜயோகம் உருவாகிறது. கூட்டுத் தொழிலில் இருப்பவர்களுக்கு அபரிமிதமான லாபம் கிடைக்கும். எதிரிகள் தானாகவே விலகிச் செல்வார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை சேர்க்கும் செய்திகள் வரும். வாழ்க்கைத் துணையுடன் பேசும்போது நிதானம் தேவை.

  1. சிம்மம்

சிம்ம ராசிக்கு ஆறாம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் சத்ரு பயம் நீங்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடன் சுமைகள் படிப்படியாக குறையும். தொழிலில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். முன்கோபத்தை கட்டுப்படுத்தினால் இந்த யோகத்தின் முழு பலனை பெறலாம்.

  1. விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு மூன்றாம் இடத்தில் செவ்வாய் அமர்வதால் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். ஆன்மீக பயணங்கள் கைகூடும். விளையாட்டு மற்றும் பாதுகாப்புத் துறையில் இருப்பவர்களுக்கு புதிய சாதனைகள் படைக்கும் வாய்ப்பு உண்டு. புதிய முதலீடுகள் செய்ய இது சிறந்த காலம்.

  1. மகரம்

செவ்வாய் உச்சம் பெறும் ராசியே மகரம் என்பதால், இந்த ருச்சக ராஜயோகத்தின் முழு முதல் பலனை மகர ராசியினரே அனுபவிப்பார்கள். ஆளுமைத் திறன் மேம்படும். புதிய வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டு. நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த கட்டுமானப் பணிகள் சுபமாக நிறைவேறும்.

நன்மையை மேலும் அதிகரிக்க, செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வாய் காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபிப்பது சிறப்பு.