பிக் பாஸ் 9 வெளியேற்றத்திற்குப் பிறகு 24 மணி நேர தனிமை கொடுமை… கனி திரு கதறல்.!
பிக் பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு, நிர்வாகத்தினர் கனி திருவை 24 மணி நேரம் தனிமையில் வைத்திருந்ததாகவும், அந்த நேரம் மிகவும் கொடுமையாகக் கழிந்ததாகவும் கனி திரு உருக்கமாக தெரிவித்தார். குறைந்த வாக்குகள் காரணமாக மக்கள் ஏன் தன்னை வெளியேற்றினர் என்பது அவரது மனதில் தொடர்ந்த கேள்வியாக ஓடிக்கொண்டிருந்தது. இதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவர் தவித்ததாகவும் கூறியுள்ளார். கனி திரு, “மனிதர்களை மிகவும் நேசிப்பவன் நான். ஆனால் அவர்களுக்கு என்னை பிடிக்கவில்லை என்ற உண்மை வலியளித்தது” என்று பகிர்ந்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 9 தற்போது 13-வது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த வாரத்தில் அமித் பார்கவ் மற்றும் கனி திரு குறைந்த வாக்குகள் காரணமாக வெளியேற்றப்பட்டனர். வீட்டிற்கு திரும்பிய கனி, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட வீடியோவில், மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறினார். தனிமை முடிந்ததும், குடும்பத்தினர், சகோதரி விஜயலட்சுமி, கணவர் மற்றும் குழந்தைகளை சந்தித்த பிறகு இயல்பு நிலைக்கு திரும்ப முடிந்ததாக அவர் பகிர்ந்தார்.
அவர் மேலும், “ரசிகர்களின் அன்புக்கு வார்த்தைகளே இல்லை. அவர்களது வீடியோக்களை பார்த்தபோது மனம் நெகிழ்ந்தது. நான் வணங்கிய தெய்வங்கள் என்னை கைவிடவில்லை” என்று நம்பிக்கையுடன் கூறினார். இதற்கிடையே, விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் சான்ட்ராவை வைத்துக்கொண்டு கனி திருவை வெளியேற்றியதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ரசிகர்கள், “அரசியல் நிறைந்த முடிவு இது. கனி என்றுமே மனதில் ராணியாக இருப்பார்” என்ற கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
