“இது லிஸ்டுலேயே இல்லையே… அவருக்கு போன் போடுங்க!” – விஜய் பேசிய கால், ஆனால் நெகட்டிவாக வந்த பதில்.!
சென்னை: தமிழ்நாட்டில் அரசியல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. அந்த வகையில், நடிகர் விஜய் தலைமையில் உருவாகும் 3வது அணியை அமைப்பதற்கான பணிகள் தற்போது வேகமெடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, விஜய் முக்கியமான அரசியல் நபர் ஒருவருக்கு நேரடியாக தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அந்த அழைப்புக்கு வந்த பதில் விஜய்க்கு சாதகமாக இல்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் விஜயின் அரசியல் பயணத்திற்கு பின்னணியில் அரசியல் ஆலோசகராக இருப்பவர் ஜான் ஆரோக்கியசாமி. விஜயின் அரசியல் உரைகள், பொது மேடை அணுகுமுறை, செயல்பாடுகள் மட்டுமின்றி, அவரது உடை அலங்காரம் வரை ஆலோசனை வழங்குபவர் ஜான் ஆரோக்கியசாமி என கூறப்படுகிறது. விஜய் எடுக்கும் பல முக்கிய முடிவுகளின் பின்னணியில் இவர் மாஸ்டர்மைண்டாக செயல்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ஜான் ஆரோக்கியசாமி – அரசியல் ஆலோசனையில் அனுபவம்:
திருச்சியை சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி, முன்னதாக பாமகவிற்கு தேர்தல் பணிகளை செய்தவர். “மாற்றம், முன்னேற்றம், அன்புமணி” என்ற பாமக பிரச்சாரத்தை முன்னெடுத்தவர் இவர்தான். அந்த தேர்தலில் பாமக பெரும் வெற்றியை பெறவில்லை என்றாலும், ஜான் ஆரோக்கியசாமி உருவாக்கிய அந்த பிரச்சாரம் தமிழக அரசியலில் பெரும் டிரெண்டாக மாறியது.
வெளிநாடுகளில் பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஜான் ஆரோக்கியசாமி, திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாமகவை அரசியல் மேடையில் வேறுபட்ட அணுகுமுறையுடன் முன்வைத்தார். அதுமட்டுமின்றி, வட மாநிலங்களிலும் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அனுபவம் இவருக்கு உண்டு. குறிப்பாக, மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்காக மேற்கொண்ட தேர்தல் பணிகள், அந்த கட்சி அதிக இடங்களை வெல்ல முக்கிய காரணமாக அமைந்ததாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், விஜய் மேற்கொண்ட சமீபத்திய தொலைபேசி அழைப்பு மற்றும் அதற்குக் கிடைத்த நெகட்டிவ் பதில், 3வது அணியின் கூட்டணி கணக்குகளை மீண்டும் பரிசீலிக்க வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜயின் அரசியல் நகர்வுகள் அடுத்தடுத்து எப்படி அமையும் என்பதில் அரசியல் வட்டாரங்கள் உற்றுநோக்கி வருகின்றன.
