“Vijay யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்? திரிஷாவிடம் கேளுங்க!” – பிடி செல்வகுமார் ஷாக்கிங் பேட்டி.!

சென்னை: நடிகர் Vijayயின் வளர்ச்சிக்கு பலர் முக்கிய பங்களிப்பு செய்துள்ளனர். குறிப்பாக, அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், விஜயை சினிமாவில் அறிமுகப்படுத்தி, ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து ‘விஜய் மக்கள் இயக்கம்’ என அரசியல்படுத்தியவர்.

அதேபோல், 30 ஆண்டுகளுக்கும் மேலாக விஜயிடம் பணிபுரிந்தவர் மற்றும் முன்னாள் மேனேஜர் பிடி செல்வகுமார். இவர் தயாரித்த திரைப்படங்களில் விஜய் நடித்திருப்பதுடன், குறிப்பாக “புலி” படத்திலும் நடித்தார். ஆனால் அந்த படத்தின் வெளிவரும்போது வருமான சோதனையில் செல்வகுமார் சிக்கினார்; அதற்கு விஜய் உதவியளிக்கவில்லை என்று செய்திகள் வந்தது.

பிடி செல்வகுமார் சமீபத்தில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளார். அவர் முன்னதாகவும், தற்போது செய்தியாளருடன் பேசியபோது, விஜயின் வளர்ச்சிக்கு பங்கு வகித்த பலர் இன்று அவர் அருகில் இல்லாத நிலையை குறித்தார். “எஸ்.ஏ.சி இல்லாமல் விஜயின் வளர்ச்சி கிடையாது. ஆனால் அவர் அதை மறந்துவிட்டார். நானும் அவருடன் இருந்தேன். ரசிகர் மன்ற தலைவர் ஜெய்ஸ்ரீதரன், மாநில செயலாளர் ரவி ராஜன் ஆகியோரையும் வெளியே அனுப்பியுள்ளார்” என்றார்.

மேலும், “புலி படத்தை தயாரித்து எனக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நடிகரென்றால் கூட்டம் கூட தான் செய்யும். சில்க் ஸ்மிதா, சினேகா, நமீதா போன்றோர் வந்தாலே ரசிகர்கள் வருவார்கள். கிளாமருக்காக ஓட்டு போடலாம், ஆனால் எல்லோரும் அப்படிச் செய்ய மாட்டார்கள்” எனவும் செல்வகுமார் கூறினார்.

செய்தியாளர் ஒருவர், “விஜய் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்?” என்று கேட்டபோது, செல்வகுமார், “அது எனக்கு எப்படி தெரியும்?.. திரிஷாவிடம் கேளுங்க, அவருக்கு வேணா தெரியும்” என்று பதிலளித்தார்.