காலம் என்னை கொல்லும் வரை பேசிக்கொண்டே இருப்பேன்” – நடிகர் விநாயகன்
மலையாள திரையுலக நடிகர் விநாயகன், தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி, பேசுபொருளாக இருந்து வருகிறார். அவரது வெளிப்படையான பேச்சுகளும், சர்ச்சையான கருத்துகளும் அடிக்கடி சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பி வருகின்றன.
சினிமா பயணத்தைப் பொருத்தவரை, நடிகர் மம்மூட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘களம்காவல்’ திரைப்படத்தில் விநாயகன் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, அவர் ‘ஜெயிலர் 2’ மற்றும் மலையாள திரைப்படமான ‘ஆடு 3’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘ஆடு 3’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது, சண்டைக் காட்சி ஒன்றை படமாக்கும் போது விநாயகனுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை முடிந்த பின்னர் தற்போது வீடு திரும்பியுள்ள விநாயகன், தனது உடல்நிலை குறித்து நலம் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், “காலம் என்னை கொல்லும் வரை பேசிக்கொண்டே இருப்பேன்” என்ற அவரது சமீபத்திய கருத்து மீண்டும் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாகவும், அவரது உடல்நிலை குறித்தும் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் கவலை மற்றும் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
