✍️ Life Coach: தமிழ்மாறன்..Stop living on autopilot – உங்கள் பழக்கங்கள் தான் உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கிறது

பலர் வாழ்க்கையைப் பற்றி ஒரு விஷயம் சொல்வார்கள்:
“சார்… நான் ரொம்ப முயற்சி பண்றேன். ஆனா வாழ்க்கை மாறவே மாட்டேங்குது.”
உண்மையிலேயே அவர்கள் முயற்சி செய்யாதவர்கள் இல்லை.
ஆனால் ஒரு விஷயம் மட்டும் புரிந்து கொள்ளவில்லை. வாழ்க்கையை மாற்ற முயற்சி செய்கிறார்கள்… பழக்கங்களை மாற்ற மறுக்கிறார்கள். இதுதான் உண்மையான பிரச்சனை.

நம்ம வாழ்க்கையின் பெரும்பாலான முடிவுகள் நாம் யோசித்து எடுப்பவை அல்ல. Habit-ஆ எடுப்பவை.
காலை எழுந்ததும் mobile.
படுக்கையில் இருந்தபடியே social media. வேலையை தள்ளிப்போடுவது.
“நாளைக்கு பண்ணலாம்” என்ற பழக்கம். இந்த சின்ன விஷயங்கள் ஒன்றாக சேர்ந்து
நம்ம வாழ்க்கையை
autopilot mode-ல் ஓட வைக்கிறது.
Autopilot-ல் ஓடும் வாழ்க்கை
பாதுகாப்பாக இருக்கும்.
ஆனால் அது உங்களை
எங்கும் கொண்டு போகாது.
இங்கே ஒரு முக்கியமான உண்மை:

“You don’t rise to your goals.
You fall to your habits”
நீங்கள் பெரிய கனவுகள் வைத்திருக்கலாம்.
ஆனால் தினசரி பழக்கங்கள்
அந்த கனவுகளுக்கு எதிராக இருந்தால், வாழ்க்கை அங்கேயே நின்றுவிடும். பலர் நினைப்பார்கள்:
“ஒரு நாள் motivation வந்தா நான் மாறிடுவேன்.”
ஆனால் motivation நம்பி
யாரும் வாழ்க்கையை மாற்றியதில்லை.

Motivation is temporary.
Habits are permanent.
நல்ல பழக்கம் என்றால்
ஒரே நாளில் பெரிய மாற்றம் இல்லை. ஆனால் தினமும் சின்ன முன்னேற்றம் இருக்கும்.
கெட்ட பழக்கம் என்றால்
ஒரே நாளில் பெரிய சேதம் இல்லை.
ஆனால் தினமும் சின்ன பின்னடைவு இருக்கும்.இதுதான் வாழ்க்கை.
ஒரு நாள் தவறு செய்தால்
வாழ்க்கை கெட்டுப் போகாது.
ஆனால் தவறே பழக்கமாகிவிட்டால்,
வாழ்க்கை அதே இடத்தில் சிக்கிக் கொள்கிறது. இன்னொரு முக்கியமான விஷயம்:
பழக்கங்களை மாற்ற
முழு வாழ்க்கையையும் மாற்ற வேண்டிய அவசியமில்லை.

“Change the environment, not your willpower.”
Mobile-ஐ தூங்கும் இடத்திலிருந்து விலக்குங்கள்
காலை 10 நிமிடம் அமைதி
தினமும் ஒரு பக்கம் வாசிப்பு
ஒரு நாள் ஒரு நல்ல முடிவு
இந்த சின்ன மாற்றங்கள்
நாளை உங்கள் வாழ்க்கையின் திசையை மெல்ல மாற்றும்.
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்:
நீங்கள் இன்று இருக்கும் இடம்
ஒரு பெரிய தவறின் விளைவு இல்லை.

It is the result of repeated small habits.
அதேபோல,நீங்கள் நாளை போகும் இடமும் ஒரே ஒரு பெரிய முயற்சியால் அல்ல.
Daily small discipline-ஆல் தான்.
இன்று செய்ய ஒரு சின்ன Action:
இன்று ஒரு பழக்கத்தை மட்டும் தேர்வு செய்யுங்கள்.
இன்று தொடங்குங்கள்
அதை 7 நாட்கள் மட்டும் தொடருங்கள். பெரிய மாற்றம் உடனே தெரியாது. ஆனால் நீங்கள் மாற ஆரம்பித்ததை
உங்கள் மனம் உணரும்.
“Your life doesn’t need a revolution.
It needs a small routine correction.”
அந்த correction-ஐ இன்று இப்போதே ஆரம்பியுங்கள்.

வாழ்க்கை ஒரு கேள்வியிலிருந்து தான் மாற ஆரம்பிக்கும்.
அந்த கேள்வியை இன்று நீங்கள் கேட்டிருந்தால், நீங்கள் ஏற்கனவே மாற்றத்தின் பாதையில் இருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கை குறித்து பேச, தெளிவு பெற, அல்லது ஒரு வழிகாட்டல் தேவை என்றால்—

You can reach me on WhatsApp.
📩 WhatsApp: 9884295482
— Life Coach தமிழ்மாறன்

Class Register

மேலும் விரிவான விபரங்களுக்கு எனது whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.!