12 வருடங்களுக்கு பிறகு திரைக்கு திரும்பும் அஜித் பட நடிகை பிரியங்கா உபேந்திரா.!
90களில் தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்த பிரியங்கா திரிவேதி, திருமணத்திற்கு பிறகு திரையுலகில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார். இப்போது இவர் பிரபல நடிகர் உபேந்திராவின் மனைவி. திருமணத்துக்குப் பிறகு தன்னுடைய பெயரை பிரியங்கா உபேந்திரா என மாற்றியுள்ளார்.
கொல்கத்தாவை சேர்ந்த பிரியங்கா ஆரம்பத்தில் பெங்காலி சினிமாவில் நடித்து வந்தார். பின்னர் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்தவர். 2002 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த ராஜ்ஜியம் திரைப்படத்துடன் தமிழில் அறிமுகமானார். அதேபோல் அஜித் நடிப்பில் ராஜா திரைப்படத்தில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இதில், ஜோதிகா கதாநாயகியாக இருந்த போதும், பிரியங்கா நடிப்பு ரசிகர்களின் கவனத்தை பெற்றது. குறிப்பாக அஜித் அவரை ‘தயிர்சாதம்’ என்று செல்லமாக கூப்பிடுவது ரசிகர்களுக்கு நன்கு பிடித்தது.
மேலும், விக்ரமுக்கு ஜோடியாக காதல் சடுகுடு திரைப்படத்தில் ஐஸ் எனும் கதாபாத்திரத்தில் நடித்தார்.
இதில், 12 வருடங்களுக்குப் பிறகு பிரியங்கா ஹிந்தி திரைப்பட செப்டம்பர் 21-ல் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இதில் அவர் கேர் டேக்கர் வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்திய புகைப்படங்களில் அவரின் தோற்றம் முற்றிலும் மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது, ஒவ்வொருவரும் அடையாளம் காண முடியாத அளவுக்கு புதிய லுக் பெற்றுள்ளார்.
இது பிரியங்காவின் திரைக்கு மீண்டும் திரும்பும் பயணத்தின் தொடக்கமாகும், ரசிகர்கள் அவரை புதிய கதாபாத்திரத்தில் பார்க்க ஆவலுடன் உள்ளனர்.
