உடலுறவு உணர்வு அதிகமாக இருந்தாலும்… நடிகை தமன்னா கூறிய உண்மை.!

நடிகை தமன்னா சமீபத்தில் ஒரு பேட்டியில் படுக்கையறை காட்சிகள் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் குறித்து திறந்தபடியாகப் பேசியுள்ளார். ஒரு நேரடி கேள்விக்கு அவர் பதிலளித்தார்: “படுக்கையறை காட்சிகளில் ஹீரோவுடன் ரொமான்ஸ் செய்யும்போது உண்மையில் அந்த உணர்வு ஏற்படுகிறதா? அப்போது மனநிலை எப்படி இருக்கும்?”

தமன்னா பதிலளித்தது: “நடிகர்-நடிகை இருவரும் அந்த காட்சிகளில் நடிப்பது நிச்சயம் தெரிந்த விஷயம். படப்பிடிப்பு தளத்தில் லைட்மேன், இயக்குனர், உதவி இயக்குனர்கள் உள்ளிட்ட பலர் சுற்றி இருப்பார்கள். அப்படி இருக்கும்போது நிஜமான ரொமான்ஸ் உணர்வு எப்படி ஏற்படும்? வீடியோவில் பார்த்தால் தோன்றலாம், ஆனால் அது வெறும் நடிப்பு மட்டுமே.”

மேலும், “பல சமயங்களில் நடிகர்களே அதிக சங்கடப்படுவார்கள். புதிய நடிகராக இருந்தாலும், ‘அத்து மீறிவிடுமோ, தவறாக நடந்துவிடுமோ’ என்ற பயம் அவர்களுக்கு இருக்கும். சில சமயங்களில் பிரச்சினைகள் நடக்கலாம், அதனால் நடிகர்கள் பயத்துடனே நடிப்பார்கள். நான் நடிகையாக, காட்சி நன்றாக வர வேண்டும் என்ற நோக்கில் எந்த விதிமுறையும் விதிக்காமல் நடிப்பேன். சூழலைப் புரிந்து நடிகர்கள் நடிப்பார்கள். ஒருவேளை உணர்வு தோன்றினாலும், சுற்றிலும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பார்த்தால், அடுத்த நிமிடமே அது போய்விடும்!”

தமன்னாவின் இந்த வெளிப்படையான பேச்சு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.