படையப்பா வாய்ப்பு வந்தபோது ரஜினி எப்படி இருந்தார்? – சௌந்தர்யா சொல்லியது
சென்னை: நடிகை சௌந்தர்யா தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் டாப் நடிகையாக வலம் வந்தவர். ரஜினியுடன் அருணாச்சலம், படையப்பா என இரண்டு படங்களில் நடித்த இவர், கமலுடன் காதலா காதலா படத்திலும் நடித்துள்ளார். மிகச்சிறந்த நடிகையாக பெயர் பெற்ற இவர், 2004 ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். தற்போது படையப்பா படம் குறித்து அவர் கூறிய வீடியோ ஒன்று மீண்டும் சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த சௌந்தர்யா, தமிழில் கார்த்திக் ஹீரோயாக நடித்த பொன்னுமணி மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். ஆர்.வி. உதயகுமார் இயக்கிய அந்த படம் சூப்பர் ஹிட் அடித்ததையடுத்து தொடர்ந்து தமிழ் படங்களில் கமிட்டானார். ரஜினி, கமல் ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்த இவர், ஒருகட்டத்தில் தெலுங்கு படங்களுக்கும் சமமான பிஸியான நடிகையாக வலம் வந்தார்.
பீக்கில் இருக்கும்போதே திருமணம்: தமிழில் அப்போதெல்லாம் பிஸியானாலும், தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை விட்டவில்லை. இந்த சூழலில், தனது கரியர் உச்சத்தில் இருக்கும்போதே ரகு என்பவரை திருமணம் செய்துகொண்டார். பொதுவாக ஒரு நடிகை மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும்போது திருமணம் செய்ய தயங்குவதாக இருக்கிறார்களே, ஆனால் சௌந்தர்யா இதை செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
கோர விபத்தில் மரணம்: திருமணத்திற்கு பிறகு குடும்பத்தோடு செட்டில் ஆன இவர், அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கினார். 2004ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரை செய்ய தனது சகோதரருடன் ஹெலிகாப்டரில் சென்ற போது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினார். இதில் அவர் மற்றும் சகோதரர் உயிரிழந்தனர். அவரது உயிரிழப்பு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் உச்சக்கட்ட சோகத்தை ஏற்படுத்தியது. 20 ஆண்டுக்கும் மேல் காலம் கடந்தாலும், சௌந்தர்யாவின் இடத்தை நிரப்ப முடியவில்லை.
