“அவர்கள் என்ன சொல்வார்கள்?” – இந்த ஒரே பயம் எத்தனை வாழ்க்கைகளை நிறுத்தி வைத்திருக்கிறது தெரியுமா? இன்றைய வாழ்க்கை தெளிவு✍️ Life Coach: தமிழ்மாறன்
நம்ம வாழ்க்கையை முழுமையாக நாம வாழ முடியாததற்கான மிகப் பெரிய காரணம் ஒன்று தான்.
“அவர்கள் என்ன சொல்வார்கள்?”
இந்த ஒரு கேள்வி தான்
எத்தனை கனவுகளை கொன்றிருக்கிறது,
எத்தனை முடிவுகளை நிறுத்தி வைத்திருக்கிறது,
எத்தனை மனிதர்களை உள்ளுக்குள்ளேயே சுருங்க வைத்திருக்கிறது தெரியுமா?
சின்ன வயசுல இருந்து இதையே கேட்டு வளர்ந்திருக்கோம்.
“இப்படி பேசாதே…”
“அவர்கள் சிரிப்பார்கள்…”
“அது நமக்கு சரி இல்லை…”
மெல்ல மெல்ல,
நம்ம வாழ்க்கையின் steering wheel
நம்ம கையிலிருந்து மற்றவர்களிடம் போய்விடுகிறது.
நாம் செய்ய விரும்புவது ஒன்றாக இருக்கும்.
ஆனால் செய்யும் வாழ்க்கை இன்னொன்றாக இருக்கும்.
ஏன்? பயம்??
இந்த பயம் உண்மையிலேயே யாரிடமிருந்து வருகிறது?
அவர்கள் நம்ம வாழ்க்கையை வாழப் போகிறார்களா?
நம்ம தோல்வியை அவர்கள் சுமக்கப் போகிறார்களா?
நம்ம மனவேதனையை அவர்கள் தாங்கப் போகிறார்களா?
இல்லை.
ஆனால் முடிவுகளை மட்டும்
அவர்கள் கையில் கொடுத்துவிடுகிறோம்.
உண்மை என்ன தெரியுமா?
மக்கள் பேசுவார்கள்.
நீங்கள் சரியாக செய்தாலும் பேசுவார்கள்.
தவறாக செய்தாலும் பேசுவார்கள்.
முன்னேறினாலும் பேசுவார்கள்.
நின்றாலும் பேசுவார்கள்.
அப்படியானால் ஒரு கேள்வி எழுகிறது.
“பேசுறவர்களுக்காக வாழணுமா?,
வாழ்க்கைக்காக வாழணுமா?”
இங்கேதான் தன்னம்பிக்கை தேவையாகிறது.
தன்னம்பிக்கை என்றால்
அகம்பாவம் இல்லை.
மற்றவர்களை குறைவாக நினைப்பதும் இல்லை.
“என் வாழ்க்கைக்கு நான் பொறுப்பு”
என்ற தெளிவு தான் தன்னம்பிக்கை.
நினைவில் வையுங்கள்:
மற்றவர்கள் கருத்து ஒரு ஆலோசனை ஆகலாம்.
அது உத்தரவு அல்ல.
நம்ம ஊர்ல ஒரு பழக்கம் இருக்கு.
வெற்றி அடைந்தவனைப் பார்த்து சொல்வார்கள்:
“அவனுக்கு அதிர்ஷ்டம்.”
அதே மனிதன் தோற்றால்:
“நான் அப்பவே சொன்னேன்.”
அதனால் தான்
வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவுகளை
கூட்டத்தோடு சேர்ந்து எடுக்கக்கூடாது.
கூட்டம் பாதுகாப்பு தரும்.
ஆனால் தெளிவு தராது.
தெளிவு தனியாகத்தான் வரும்.
அதற்காக சில நேரம்
தனியாக நிற்க துணிவு வேண்டும்.
ஒரு விஷயத்தை நினைவில் வையுங்கள்:
இன்று நீங்கள் எடுக்கும் ஒரு பயத்தினால் ஆன முடிவு,
நாளை உங்கள் வாழ்க்கையை வருத்தமாக மாற்றும்.
அதேபோல,
இன்று நீங்கள் எடுக்கும் ஒரு துணிச்சலான முடிவு,
நாளை உங்கள் வாழ்க்கையை மதிப்புள்ளதாக மாற்றும்.
இன்று செய்ய ஒரு சின்ன பயிற்சி:
ஒரு காகிதத்தில் இரண்டு கேள்வி எழுதுங்கள்:
“நான் செய்ய விரும்பும், ஆனால் பயப்படும் ஒரு விஷயம் என்ன?”
“அதை செய்யாததால் நான் இழப்பது என்ன?”
இந்த இரண்டு பதில்கள்
உங்களுக்கு வாழ்க்கையின் அடுத்த திசையை
மெல்ல காட்ட ஆரம்பிக்கும்.
மக்கள் என்ன சொல்வார்கள் என்பதை விட,
நீங்கள் உங்களிடம் என்ன சொல்கிறீர்கள் என்பதே முக்கியம்.
ஏனென்றால்,
இந்த வாழ்க்கையை வாழப்போவது அவர்கள் இல்லை… நீங்கள் மட்டுமே!..
வாழ்வியல் பயணம் தொடரும்…
“வாழ்க்கை தெளிவு – 7 நாள் மாற்றப் பயணம்”
Original Fees: ₹999
Early Bird Fees: ₹699
⏰ Valid for first 20 members only.
மாற்றத்தை தள்ளிப் போடாதீங்க.
Interested என்றால் கீழே இருக்கும் Whatsapp நம்பருக்கு
“EARLY” என்று மெசேஜ் அனுப்புங்கள்.
- “Lifestyle Trainer” Dr.A.Tamizhmaran
