சென்னைவாசி ஆன்லைனில் ஆணுறை வாங்க ஒரு ஆண்டிற்கு ரூ.1 லட்சம் செலவு.. ஷாக்கிங் நியூஸ்.!

இந்தியர்கள் ஆன்லைனில் கடைக்கு சென்று நேரில் வாங்குவதைக் காட்டிலும், இணையதள வழியாக பொருட்களை வாங்கும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரபல தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சென்னையில் வசிக்கும் ஒருவர் கடந்த ஒரே ஆண்டில் 228 முறை ஆணுறை (Men’s grooming products) ஆர்டர் செய்து, மொத்தம் ரூ.1,06,398 செலவு செய்துள்ளார்.

ஒவ்வொரு ஆர்டரிலும் சராசரியாக 127 பொருட்கள் வாங்கப்பட்டதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, செப்டம்பர் மாதம் ஆணுறை விற்பனை 24% உயர்ந்தது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அதிலும் கூட, இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் பரவலாக உள்ளது. உதாரணமாக நொய்டாவில்
புளூடூத் ஸ்பீக்கர்கள் மற்றும் ரோபோ வாக்வம் கிளீனரை ஒரே நேரத்தில் ரூ.2.69 லட்சம் செலவில் வாங்கியுள்ளார் ஒருவர்..

மும்பையில் சர்க்கரை இல்லாத ரெட்புல் பானத்துக்கு ரூ.16.3 லட்சம் செலவிட்டவர். சென்னையில் செல்லப்பிராணிகளுக்கான பொருட்களுக்கு மட்டும் ரூ.2.41 லட்சம் செலவு செய்தவர்.

பெங்களூரில் நற்பண்பான வாடிக்கையாளர்கள், தாராளமாக டிப்ஸ்களை வழங்குவதாகவும் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தரவுகள், ஆன்லைன் ஷாப்பிங் பழக்கம் இந்தியர்களிடையே அதிகரித்து வரும் நிலையை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக ஆணுறை, செல்லப்பிராணி பொருட்கள், உணவுப்பொருட்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் போன்றவை மக்கள் அதிகமாக ஆர்டர் செய்யும் பிரபலமான பொருட்களாக அமைந்துள்ளன.

சுருக்கமாக, ஆன்லைன் ஷாப்பிங் வசதி, நேரம் மிச்சப்படுத்தும் தன்மை மற்றும் விருப்பமான பொருட்களை எளிதில் வாங்கும் சுலபத்தன்மை காரணமாக, இந்தியர்கள் தங்களின் தினசரி தேவைகளுக்கும், விருப்பங்களுக்கும் இணையதளத்தை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.