தடயவியல் ஆய்வு: இயேசுவின் ‘அசல்’ முகம் இதுதான்! சற்றுமுன் வெளியான அதிர வைக்கும் தகவல்.!

தேவாலயங்களில் நாம் பார்த்து பழகிய இயேசு கிறிஸ்துவின் உருவம் உண்மையில் வரலாற்று ரீதியாக தவறானது என்று புதிய தடயவியல் மானுடவியல் (Forensic Anthropology) ஆய்வு நிரூபித்துள்ளது. பல நூற்றாண்டுகளாக ஐரோப்பிய ஓவியர்கள் அவரை நீண்ட வெண்மை தோல், நீல நிற கண்கள் மற்றும் நீண்ட பழுப்பு நிற முடி கொண்டவராகக் காட்டினர். ஆனால் புதிய ஆய்வுகளின் படி, இயேசு மத்திய கிழக்கு யூதன், மானிற நிறத்தோடு, கறுப்பு கண்கள், குட்டையான சுருள் முடி மற்றும் வலிமையான தசைநார்களுடன் 30 வயதின் ஆரம்பத்தில் இருந்தவர்.

பிரிட்டிஷ் மருத்துவக் கலைஞர் ரிச்சர்ட் நீவ் (Richard Neave), இஸ்ரேலிய தொல்பொருள் ஆய்வாளர்களுடன் இணைந்து, இயேசுவின் முகத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினார். ஆய்வுக்கு முன்னோட்டமாக, இயேசு வாழ்ந்த காலத்தைச் சேர்ந்த 3 யூதர்களின் மண்டையோடுகளைக் கொண்டு டிஜிட்டல் 3D உருவம் உருவாக்கப்பட்டது.

ஆய்வுகளின்படி, அக்கால யூத ஆண்களின் சராசரி உயரம் 5 அடி 1 அங்குலம், எடை சுமார் 50 கிலோ. எனவே ஓவியங்களில் காட்டப்படுவது போல் உயரமானவர் அல்ல. நீண்ட முடி வளர்ப்பது அவருக்குப் பொருந்தாதது; அவருக்கு சுருள் குறுகிய முடி மட்டுமே இருந்திருக்கும். கடின உழைப்பின் காரணமாக வலிமையான தசைநார்கள் மற்றும் முதிர்ந்த தோல் தோற்றம் இருந்திருக்கும்.

ஆய்வாளர்கள் கருத்து: “பல நூற்றாண்டுகள் ஓவியர்கள் உருவாக்கிய கற்பனைச் சித்திரங்களை விட, இந்த அறிவியல் உருவம் தான் இயேசுவின் உண்மைக்கு மிக நெருக்கமானது”.
இவ்வாய்வு நமக்கு ஒரு முக்கிய உண்மையை நினைவூட்டுகிறது கலாச்சார மதிப்பீடுகள் இயேசுவின் உருவத்தை மாற்றினாலும், வரலாற்று மற்றும் அறிவியல் அடிப்படையில் அவர் ஒரு மத்திய கிழக்கு மனிதராகவே இருந்தார்.