வெறும் வயிற்றில் கருவேப்பிலை சாப்பிட்டால் என்ன நடக்கும்? தினசரி உணவுகளில் மறைந்துள்ள ஆரோக்கிய ரகசியங்கள்.!

நமது அன்றாட சமையலில் எளிதாக கிடைக்கும் சில உணவுப் பொருட்களை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், பல்வேறு உடல்நலக் கோளாறுகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, வெறும் வயிற்றில் சில இயற்கை உணவுகளை உண்பது உடலுக்கு கூடுதல் நன்மைகளை வழங்கும் என கூறப்படுகிறது.

அந்த வகையில், சின்ன வெங்காயம், பூண்டு, கருவேப்பிலை மற்றும் வெந்தயம் போன்ற உணவுகளால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

சின்ன வெங்காயம் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்ற உதவுகிறது. இதனை தொடர்ந்து உண்பதால் வாய் புண், கண் வலி போன்ற பிரச்சனைகள் குறையும்
இரத்த சோகை, தலைவலி, முழங்கால் வலி, பார்வை மங்குதல் போன்றவை சீராகும்…

இதய நோய்கள் உள்ளவர்களுக்கு நல்ல பயன் தரும்..பச்சை வெங்காயம் உடலுக்கு தேவையான இரும்புச் சத்தை அதிகரிக்க உதவுகிறது..

பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்…பூண்டு ஒரு சக்திவாய்ந்த இயற்கை மருந்தாக கருதப்படுகிறது.
தொடர்ந்து பூண்டு உண்பதால்:

சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் குறையும்…நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்…ரத்த அழுத்தம் சீராகும்
கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்..இதய நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் வராமல் தடுக்கும்

வெறும் வயிற்றில் கருவேப்பிலை
காலையில் வெறும் வயிற்றில் கருவேப்பிலையை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது என கூறப்படுகிறது.
இதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும்
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீராகும்…இதய நோய் வராமல் பாதுகாக்க உதவும்.. செரிமான கோளாறுகள் சரியாகும்..

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்
வெந்தயம் பாரம்பரிய மருத்துவத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளது.
வெந்தயத்தை உணவில் சேர்ப்பதால்
வயிற்று கோளாறுகள் சரியாகும்
மலச்சிக்கல் பிரச்சனை குறையும்
சர்க்கரை, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகளுக்கு நன்மை தரும்..
மேலும், வெந்தயம் ஒரு சிறந்த ஆரோக்கிய உணவாக உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.