அதிகமான மன உளைச்சலினால் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?? விரக்தியிலும், எரிச்சலிலும் இருக்கிறீர்களா?? இதோ உங்களுக்கான ஆலோசனை தருகிறார் – “Writer Lifestyle Trainer & Motivational Speaker” – (“Dr.A.Tamizhmaran, Hons.D.”)

அதிகமான மன அழுத்தம் மனிதனின் ஆயுளை குறைக்கின்றது. மன அழுத்தம் பல காரணங்களினால் வரலாம். குறிப்பிட்ட ஒரே ஓரு காரணத்திற்காக மட்டும்தான் மன அழுத்தம் ஏற்படுகின்றது என்று சொல்லிவிட முடியாது.. ஆனால் மன அழுத்தத்திலிருந்து இன்றைய சூழலில் நாம் அனைவரும் வெளிவர வேண்டுமென்றால் நான் சொல்கின்ற சில விஷயங்களை இன்றிலிருந்தே கடைபிடியுங்கள். பின் அதன் மாற்றத்தை நீங்களும் உணருவீர்கள்…

A. டிஜிட்டல் எனும் மாயையிலிருந்து வெளியே வாருங்கள்.

மன சோர்வை போக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தொடர்ந்து தொலைபேசி, கணணி, தொலைக்காட்சி, மடிக்கணணி என டிஜிட்டல் ஸ்கிரீன்களை பார்ப்பதை குறைத்து கொண்டு கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
உங்கள் மனதை ரிலாக்ஸாக வைத்து கொள்வதுடன் ஒருநாள் குறிப்பிட்ட நேரம் வரை டிஜிட்டல் டிவைஸ்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.
இந்த டிஜிட்டல் டீடாக்ஸை தினசரி பின்பற்றுவது மன அழுத்தத்தை குறைக்க மற்றும் ஒட்டுமொத்த அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. 

B.ரிலாக்ஸாக மெடிடேசன்

தியானத்தின் ஒருவகை மைன்ட்ஃபுல்னஸ் மெடிடேஷன் ஆகும். நீங்கள் பின்பற்ற கூடிய தினசரி வழக்கத்தில் Mindfulness தியானத்தை சேர்த்து கொள்ளுங்கள.
தினசரி சில நிமிடங்கள் உங்கள் சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள் அத்தோடு உங்கள் மனதில் இருக்கும் குழப்பங்களை நீக்குங்கள்.
இந்த எளிய மற்றும் சக்திவாய்ந்த பயிற்சி மன அமைதியை ஊக்குவிக்கிறது அத்தோடு செறிவை அதிகரிக்க செய்கிறது மற்றும் மனநிலையை பேலன்ஸாக வைத்து கொள்வதற்கு பங்களிக்கிறது.

C.இயற்கையோடு நேரம் செலவிடுங்கள்

பூங்காவில் அல்லது மலை பகுதிகளில் நடைபயிற்சி செல்வது மற்றும் சூரிய உதயம் அல்லது அஸ்தமனத்தை இரசிப்பது என எதுவாக இருந்தாலும் இயற்கை சூழலில் நீங்கள் செலவிடும் நேரம் உங்களது மன அழுத்தத்தை குறைத்து உற்சாகம் மற்றும் புத்துணர்ச்சியாக இருக்க பெரிதும் உதவும். பொதுவாக இயற்கையுடன் அதிகம் இணைந்திருப்பவர்கள் தங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என பல ஆய்வுகள் கூறியுள்ளன.

D. ஆழ்ந்த உறக்கம் :

தினசரி போதுமான அளவு நன்றாகவும் மற்றும் நிம்மதியாகவும் தூங்குவதற்கு எப்போதுமே முக்கியத்துவம் கொடுங்கள்.
இரவு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்க செல்வது, அதே போல காலை குறிப்பிட்ட நேரத்திற்கு எழுவது என்ற வழக்கத்தை பின்பற்றுங்கள்.
நீங்கள் தூங்கும் அறை நிம்மதியாக தூங்க கூடிய சூழலில் இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
அறிவாற்றல் செயல்பாடு, நினைவக ஒருங்கிணைப்பு மற்றும் உணர்ச்சி ஆரோக்கியம் என பல விஷயங்கள் நன்றாக இருக்க தினசரி தூக்கம் தரமாதாக இருப்பது அவசியம்.

E. ஆரோக்கியமான உணவு

உங்கள் உடலையும் மற்றும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க சமசீரான டயட்டை பின்பற்றுங்கள்.
ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ், ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும் வைட்டமின்ஸ் நிறைந்த உணவுகளை உங்களது அன்றாட டயட்டில் சேர்த்து கொள்ளுங்கள்
அதே போல உடலை ஹைட்ரேட்டாக வைத்து கொள்வதும் முக்கியம்.
லேசான டிஹைட்ரேஷன் கூட அறிவாற்றல் செயல்திறனை பாதிக்க கூடும்.

F. தனித்திறமைக்கு முக்கியத்துவம்

உங்களது படைப்பாற்றலை தூண்டும் மற்றும் உங்களுக்கு மகிழ்ச்சி தர கூடிய பயனுள்ள செயல்களில் ஈடுபடுங்கள்.
உதாரணமாக கவிதை அல்லது கதை எழுதுவது, ஓவியம் வரைவது மற்றும் இசைக்கருவியை வாசிப்பது போன்ற செயல்பாடுகள் உங்கள் மனநிலையை உற்சாகமாகவும் மற்றும் புத்துணர்ச்சியாகவும் வைத்திருப்பதை ஊக்குவிக்கும்.
மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் பெற மற்றும் மனதை புத்துணர்ச்சியடைய செய்யும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக படைப்பாற்றல் இருக்கிறது.

G. அனைவரோடும் பழகுங்கள்

சிலர் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நேரம் செலவிடுவதை தவிர்ப்பார்கள். இது கூட மனஅழுத்தம் அதிகரிக்க காரணமாக இருக்கலாம்.
எனவே நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உங்களை சுற்றி இருப்பவர்களுடன் உங்களது தொடர்புகளை வளர்த்து நன்றாக பேசி பழக நேரம் ஒதுக்குங்கள்.
நீங்கள் பழகும் நபர்கள் உங்களுக்கு உணர்ச்சி ரீதியான ஆதரவை வழங்கி உங்களது தனிமை உணர்வுகளை குறைப்பார்கள்.

மேலே நான் உங்களுக்கு சொல்லியிருக்கும் அனைத்தினையும் கடைபிடிக்க ஆரம்பியுங்கள்.. ஆரோக்கியமான நிம்மதியான வாழ்க்கை உங்கள் ஆயுள் முழுவதும் தொடர எங்கள் வாழ்வியல் பயிற்சி வகுப்பில் இணையுங்கள்..

தொடர்புக்கு : +91 9789016153

Class Register

மேலும் விரிவான விபரங்களுக்கு எனது whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.!