சற்றுமுன் நடிகை சமந்தாவுக்கு ஹைதராபாத்தில் நடந்த சோகம்.!
ஆரம்ப காலத்தில் இருந்து தற்போது வரை சினிமா என்பது நம்முடைய வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக மாறிவிட்டது.. செல்போன், மின்சாரம்,துரித உணவுகள் இதெல்லாம் இல்லாமல் எப்படி நம்மால் இருக்க முடியாதோ அதேபோன்று இன்றைய காலகட்டத்தில் சினிமா இல்லாமலும் இருக்க முடியாது.. சினிமாவை ரசித்த காலகட்டம் போய் இப்போது அதற்கென்று வெறிபிடித்து போன ரசிகர்கள் கூட்டமும் ஒரு பக்கம் உண்டு. இன்னும் சொல்லப்போனால் ரசிகர்கள் என்பவர்கள் அந்தப் படத்தை ரசித்து விட்டு அந்த படம் நன்றாக இருந்தால் அதனைப் பற்றி நல்ல கருத்துக்கள் சொல்லிவிட்டு கிளம்பி சென்று விடுவார்கள் ஆனால் இப்போது இருப்பவர்கள் எல்லாம் ரசிகர்கள் என்ற போர்வையில் இருக்கும் வெறியர்கள் என்றே சொல்லலாம்.. மலையாள நடிகர் மம்முட்டி ஒருமுறை சொல்கின்ற போது உங்கள் தலைவன் தலைவியை திரையில் தேடாதீர்கள் தரையில் தேடுங்கள் மக்களோடு மக்களாக யார் இருந்து பயணிக்கிறார்களோ அவர்கள் தான் உங்களில் ஒருவர் என்று சொல்லி இருந்தார்.. ஆனால் இந்த வெறி பிடித்த ரசிகர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிகம் உண்டு என்று சொல்லலாம்.. அதுவும் குறிப்பாக நடிகர்களை விட நடிகைகளை பார்த்து விட்டால் அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் உணர்ச்சிவசப்பட்டு விடுகிறார்கள் அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் தற்போது நடிகை சமந்தாவுக்கும் நடந்திருக்கின்றது..
நட்சத்திர நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யாவுடன் விவாகரத்து பெற்ற பின்னர் நீண்ட காலமாக தனிமையில் இருந்து வந்தார். சமீபத்தில், பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜ் நிடிமோருவை காதலித்து, கோவை ஈசா மையத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், ஐதராபாத்தில் உள்ள ஒரு பிரபல கடையின் திறப்பு விழாவில் நடிகை சமந்தா கலந்து கொண்டார். அவரை நேரில் பார்த்த ரசிகர்கள், அவருடன் செல்பி எடுக்க முயன்று அவரைச் சூழ்ந்தனர். இதனால் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி தவித்த சமந்தா, வேகமாக தனது காரை நோக்கிச் சென்று அங்கிருந்து புறப்பட்டார்.
ரசிகர்கள் கூட்டத்திலிருந்து அவர் தப்பிச் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோன்ற சம்பவத்தை சமீபத்தில் நடிகை நிதி அகர்வாலும் சந்தித்திருந்த நிலையில், ரசிகர்களின் கட்டுப்பாடற்ற நடத்தை மற்றும் சமூக பொறுப்பின்மை குறித்து இணையத்தில் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
