இனிமேல் காலை உணவாக புரதம் நிறைந்த இத மட்டும் சாப்பிடுங்க.. அப்புறம் பாருங்க உங்க லைப்ஸ்டைலே மாறிடும்.!
இன்றைய மருத்துவ பலனில் நாம் பார்க்கப்போவது தினசரி காலை நம் உடலுக்கு எவ்வளவு புரதம் தேவைப்படுகின்றது என்பது பற்றி தான்.. நம் உடலின் ஆரோக்கியம் மற்றும் தினசரி செயல் திறனை மேம்படுத்த காலையில் புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியமும் அத்தியாவசியமும் ஆன ஒன்றாக மாறுகின்றது தினமும் காலை உணவாக புரதத்தை உட்கொள்வது நாள் முழுவதும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கட்டி எழுப்ப உதவுகின்றது உடல் எடை குறைப்பு தசை ஆரோக்கியம் மூளை செயல் திறன் இரத்த சர்க்கரை சீராக வைப்பது போன்ற பல நன்மைகள் இதில் அடங்குகின்றது..
காலை உணவாக புரதம் உட்கொள்வதால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்பட்டு சிற்றுண்டிக்கு இடமில்லாமல் போகின்றது இது ஜங்க் உணவுகள் மற்றும் அதிக கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளுக்கு விருப்பத்தை குறைத்து நாள் முழுவதும் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுக்க வழி வகுக்கின்றன..
காலை உணவில் புரதம் சேர்த்தால் ரத்த சர்க்கரை நிலையை சீராக வைத்துக் கொள்ள முடியும் இது முழுமையின் உணர்வையும் அதிகரித்து அதிக கலோரிகளை உட்கொள்ளாமல் உதவுகின்றது இதனால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும். அதிகமான புரதம் உட்கொள்வதால் காலை உணவிற்குப் பிறகு ரத்த ஓட்டத்தில் சர்க்கரை அதிகமாக ஏற்படும் இதனால் எண்ணிக்கை அதிக அளவில் குறைகின்றது. எனவே நாள் முழுவதும் ஆற்றல் சீராக இருக்கும். அதோடு மட்டுமல்லாமல் சர்க்கரை நிலை சரியாக இருக்கும்..
புரதம் உடல் வளர்ச்சியை மேம்படுத்தும் தலையில் முக்கிய பங்கு வகுக்கின்றது. இது Thermogenesis எனப்படும் செயல்முறை நாள் அதிக கலோரியை எரிக்க உதவுகின்றது. கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்பு உணவுகளுடன் ஒப்பிடும்போது புரதம் நிறைந்த காலை உணவு அதிக வளர்ச்சிதை மாற்றத்தை உறுதி செய்கின்றது..
புரதம் நிறைந்த காலை உணவில் உள்ள அமினோ அமிலங்கள் டோபமைன் போன்ற நரம்பியல் கடத்திகளின் உற்பத்தியில் உதவி செய்கின்றன இதனால் அறிவாற்றல் கவனம் விழிப்புணர்வு மற்றும் மன செயல்திறன் மேம்படுகின்றது.
காலை உணவிற்கு புரதம் சேர்த்தால் தசைகளை உருவாக்கவும் சரி செய்யவும் உதவும் உடற்பயிற்சியில் ஈடுபடும் நபர்கள் அல்லது விளையாட்டு வீரர்கள் இதை சிறந்த முறையில் பயன்படுத்தலாம் தினசரி புரதம் உட்கொள்ளுதல் தசைகளுக்கு தேவையான அமினோ அமிலங்களை வழங்கி வலிமையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது. புரதம் நிறைந்த காலை உணவு மெட்டபாலிசத்தை மேம்படுத்தி நாள் முழுவதும் ஆற்றலை அதிகரிக்க உதவுகின்றது இதனால் உடல் சோர்வு குறையும் மற்றும் தினசரி வேலைகளை செய்யும் திறன் உயரும்.
காலை உணவில் புரதம் உட்கொள்ளுவதால் வயிறு குலுங்குவது, மற்றும் அஜீரண பிரச்சனைகள் அனைத்தும் சரியாகி ஜீரண முறை சிறப்பாக இருக்கும்..
புரதம் நிறைந்த காலை உணவுகளுக்கு தினம்தோறும் முட்டை பருப்பு வகைகள் பால் மற்றும் சோயா பொருட்கள் ஓட்ஸ் இட்லி பனீர் புர்ஜி கிரிக் யோகர்ட் சிக்கன் துண்டுகள் பீன்ஸ் மற்றும் கோதுமை தோசை இப்படிப்பட்ட புரதம் நிறைந்த காலை உணவினை எடுத்துக் கொண்டால் அது உடலின் முழுமையான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றும் இது உடல் எடை தசை வலிமை மூளை செயல் திறன் இரத்த சர்க்கரை நிலை மற்றும் முழுமையான சக்தியை பாதுகாக்க உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது
