அடுத்த மனைவியையும் விவாகரத்து(Divorce).. நீ எல்லாம் கடவுளா?? இதுக்கா நான் உன்னை கும்பிட்டேன்?? மன உளைச்சலில் செல்வராகவன்

இன்றைக்கு தனுஷ் மிகப்பெரிய உயரத்தில் ஹீரோவாக இருக்கிறார் என்றால் அதற்கு முக்கியமான காரணம் அவருடைய அண்ணன் செல்வராகவன் தான்.. துள்ளுவதோ இளமை எனும் திரைப்படத்தில் தனுசை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய பெருமையும் அடுத்து வெளியான காதல் கொண்டேன் எனும் பிளாக்பஸ்டர் திரைப்படம் கொடுத்த இயக்குனரும் இவர்தான்.. கிராமத்து படங்களை அதிகமாக இயக்கிய கஸ்தூரிராஜாவின் மூத்த மகன் தான் செல்வராகவன்..செல்வராகவன் படங்களை மட்டுமே இயக்கிய காலங்கள் போய் இப்போது அவர் சினிமாவில் நடிக்கவும் ஆரம்பித்து விட்டார். கடைசியாய் வெளியான ராயன் திரைப்படத்தில் மிக சிறந்த முறையில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.. 7G ரெயின்போ காலனி திரைப்படம் 90ஸ் கிட்ஸ் களின் பேவரைட்..

அந்த படத்துக்கு இன்று வரை வெறித்தனமான ரசிகர்கள் இருக்கின்றார்கள்.. அந்தப் படத்தின் போது தான் அந்த படத்தில் நாயகியாக நடித்த சோனியா அகர்வாலை செல்வராகவன் காதலிக்க ஆரம்பித்தார் அதைத் தொடர்ந்து வடசென்னை படத்திலும் சோனியா அகர்வால் ஹீரோயினாக நடித்தார்.. இருவருடைய காதலும் அவர்கள் கல்யாணத்தில் போய் முடித்தது..நன்றாக வாழ்ந்து வந்த அவர்கள் திடீரென ஒரு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விவாகரத்து(Divorce) செய்யப் போவதாக முடிவெடுத்து விவாகரத்தும் செய்து பிரிந்து போனார்கள். அதன்பின் சோனியா அகர்வாலுக்கு பெரிய மார்க்கெட் இல்லை எந்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பும் கிடைக்கவில்லை, சோனியா அகர்வால் பிரிந்த செல்வராகவன் அடுத்து தான் இயக்கம் மயக்கம் என்ன திரைப்படத்தில் தன் தம்பி தனுசையே கதாநாயகனாக நடிக்க வைத்தார் அப்போது அந்த திரைப்படத்தில் தனக்கு உதவி இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலி என்னும் பெண்ணை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்…

தற்போது ஒரு செய்தி வெளியாகி இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றது அந்த செய்தி என்னவென்றால் தமிழ் சினிமாவில் தனித்த முத்திரை பதித்த இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் தற்போது, மெண்டல் மனதில், 7ஜி ரெயின்போ காலனி-2 ஆகிய படங்களை இயக்கி வருகிறார். நடிகராகவும் கமிட் ஆகி வருகிறார்.

இவருக்கும் நடிகை சோனியா அகர்வாலுக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால், கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர். தொடர்ந்து, செல்வராகவன் அவரது உதவி இயக்குநர் கீதாஞ்சலியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கீதாஞ்சலி ‘மாலை நேரத்து மயக்கம்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு, தன் கணவர் செல்வராகவனுடனான புகைப்படங்களை இன்ஸ்டாவிலிருந்து கீதாஞ்சலி நீக்கியுள்ளார். இவர்கள் விரைவில் விவாகரத்து செய்ய போகிறார்களா எனவும் சில தினங்களாக இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. இந்நிலையில், செல்வராகவன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு வைரல் ஆகி இருக்கிறது. அவர் வெளியிட்டுள்ள பதிவில், திடீரென உங்களுக்கு அனைத்தும் தவறாய் போகும். சுற்றியுள்ளவர்கள் அனைவரும் துரோகம் செய்வது நன்றாய் தெரியும்.

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எவ்வளவு பூஜை செய்து வழிபட்டேன் என பிதற்றுவீர்கள். அப்போது அமைதியாய் இருங்கள். சில காலம்தான். பெரும் மலை, பனியாய் போகும். அனைத்தும் சரியாகி விடும்.’ என சூகமாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு யாருக்கானது எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.