சற்றுமுன் வெளியான பிரமோவில் விஜய் சேதுபதி மறைமுகமாக யாரை அப்படி சொல்லி இருக்கிறார் தெரியுமா?
டிஆர்பிக்காக தொடர்ந்து எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றன ஒவ்வொரு தொலைக்காட்சியும் தங்களுடைய டிஆர்பி யை ஏற்றுவதற்காக மக்களின் கவனத்தை முழுவதுமாக தங்கள் பக்கம் திருப்புவதற்காக என்னென்ன செய்ய வேண்டுமோ அது சர்ச்சையாக இருந்தாலும் சரி இல்லையென்றால் பார்ப்பவர்கள் சங்கடப்பட்டு முகம் சுளிப்பதாக இருந்தாலும் சரி அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் என்னென்ன செய்ய வேண்டுமோ அது அனைத்தையும் டிஆர்பிக்காக செய்து கொண்டே தான் இருக்கிறார்கள்.’ தமிழில் ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்கள் வந்திருக்கின்றன நல்ல ரியாலிட்டி ஷோக்களும் இருக்கின்றன அதே நேரத்தில் பரபரப்புக்கும் சர்ச்சைக்கும் பேர் போன சில ரியாலிட்டி ஷோக்களும் இருக்கின்றன..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 9 இதுவரை நடந்த சீசன்களிலேயே மிகவும் ரசிகர்களை தவறாமல் அதே நேரத்தில் பார்ப்பதற்கு எரிச்சல் ஊட்டும் ஒரு ரியாலிட்டி ஷோவாக இந்த சீசன் மாறி இருக்கின்றது. சீசன் ஒன்றில் ஆரம்பித்து சீசன் 7 வரை கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது ரசிகர்கள் மத்தியில் இது மிகவும் பிரபலம் அடைந்தது நடிகர் கமலின் விக்ரம் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆவதற்கும் அவர் அரசியலில் காலடி எடுத்து வைப்பதற்கும் இதை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டார். அதே நேரத்தில் கமலஹாசன் மிக பொறுப்புணர்வோடு ஒவ்வொரு விஷயத்தையும் நிதானமாக டீல் செய்வார். ஆனால் தற்போது சீசன் 8 சீசன் 9 இந்த இரண்டு நிகழ்ச்சியையும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இதற்கு முந்தைய சீசன் கூட விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும்போது ஓரளவுக்கு நன்றாக இருந்தது என்று ரசிகர்கள் சொன்னார்கள் ஆனால் இந்த சீசனில் விஜய் சேதுபதியும் சில நேரங்களில் ஒரு போட்டியாளர்கள் போல் ரியாக் செய்கிறார் கமலஹாசன் போல் அவருக்கு மிகப்பெரிய அளவில் மெச்சூரிட்டி லெவல் வேண்டும் என்றும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்திருந்தார்கள்.
திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை அந்த நிகழ்ச்சியின் டிஆர்பி மிக ஸ்லோவாக இருந்தாலும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்களில் அந்த ஷோவுக்கு என்று ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகிவிடுகிறார்கள் காரணம் அந்த இரண்டு நாட்களும் குறும்படம் போடுவது விஜய் சேதுபதி அதில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்களை கேள்வி கேட்பது என அந்த இரண்டு நாட்களுக்கும் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும்.
தற்போது இந்த பிக் பாஸ் சீசன் 9 75 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கின்றது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜியோ வியானா வெளியேறினார்கள் இந்த வாரத்திற்கான தலைவராக வினோத் இருந்தார் குறிப்பாக நாமினேஷனில் சான்றா எப்ஜே கம்ருதீன் கனி பார்வதி அமீத் சுபிக்ஷா திவ்யா கணேஷ் சபரி அரோரா ஆதிரை ஆகியோரும் நாமினேட் ஆகியுள்ளனர்.
நேற்று நடைபெற்ற டாஸ்க்கில் வெற்றி பெற்ற கம்ருதீன் அடுத்த வாரத்திற்கான வீட்டு தலைவராக தேர்வாகி இருக்கின்றார் இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பேசிய விஜய் சேதுபதி இந்த வாரம் வீடு முழுக்க ஓவர் ரியாக்ஷனா இருந்துச்சு அந்த நபர்கிட்ட ஹவுஸ் மேட்ச் கேட்டதற்கு அவங்க கிட்ட இருந்து எந்த விளக்கமும் இல்லை இதுக்கு இவ்வளவு தேவையா ஓவர் சீனா இருக்க அப்படிங்கிற மாதிரி நமக்கே தோணுச்சு அதனால இவங்க கிட்ட கேட்கிறதுக்கு நம்மகிட்ட இருந்து எந்த கேள்வியும் இல்லை அவங்க விளக்கம் கொடுத்தால் மட்டும் போதும் இருக்காமல் இவ்வளவு பில்டப் எதுக்குமா இவ்வளவு விளக்கத்தைக் கேட்டுருவோமா என்று பேசி இருக்கிறார் விஜய் சேதுபதி சொல்லும் அந்த நபர் ஒரு வேளை சான்ட்ராவாக தான் இருக்கும் என்று பிக் பாஸ் ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை கமெண்ட் செய்து வருகின்றனர்…
