சற்றுமுன் பிரபல இயக்குனர் லிங்குசாமி கைதா? ஏன் ? எதனால் ? என்ன காரணம் ? அப்படி என்ன நடந்தது தெரியுமா?
தமிழ் சினிமாவில் பல நல்ல திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என்று பெயர் எடுத்தவர் தான் லிங்குசாமி. ஒரு சாதாரண கிராமத்தில் இருந்து வந்து தன்னுடைய கடினமான உழைப்பாலும் முயற்சியாலும் ஒரு இயக்குனராக மாறி அதன்பின் தன்னுடைய திருப்பதி சகோதரர்கள் அனைவருடன் ஒன்றாக சேர்ந்து தயாரிப்பு பணியிலும் ஈடுபட்டார். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி மற்றும் முரளி அப்பாஸ் இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நடித்த திரைப்படம் தான் ஆனந்தம் இந்த படத்தில் வரக்கூடிய கதை கிட்டத்தட்ட இவர் வாழ்க்கையில் நடந்த கதை என்று அவரே ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார்.. ரன் திரைப்படத்தில் வரும் மாதவன் கதாபாத்திரம் என்னுடைய கதாபாத்திரம் நான் அப்படித்தான் இருந்தேன் அந்த படத்தில் நடந்த பெரும்பாலான காட்சிகள் உண்மையிலே எனக்கும் நடந்தது என்று அவர் சொல்லியிருந்தார்.. தொடர்ந்து சண்டக்கோழி என வரிசையாக படம் எல்லாம் கிட் கொடுத்துக் கொண்டிருக்க எப்போது அஞ்சான் படம் வர ஆரம்பித்ததோ அப்போதிலிருந்து அவருக்கு இரங்கு முகம் ஆரம்பித்தது.. நடிகர் கமலஹாசன் நடித்திருந்த உத்தம வில்லன் திரைப்படத்திற்கு இவர் தான் தயாரிப்பாளர் அந்த படத்தில் மிகப்பெரும் நஷ்டத்தை சந்தித்து தொடர்ந்து கடன் மேல் கடன் வாங்க ஆரம்பித்தார் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளானார் என்றே சொல்லலாம்.
இயக்குனர் லிங்குசாமி தன்னுடைய தம்பி சுபாஷ் சந்திரபோஸ் உடன் இணைந்து திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றார் 2016 ஆம் ஆண்டு லிங்குசாமியும் அவரது தம்பியும் தங்களது தயாரிப்பு நிறுவனத்திற்காக ரூபாய் 35 லட்சத்தை paceman Finance நிறுவனத்திடம் கடனாக பெற்று இருக்கின்றன இந்த கடனை வட்டியுடன் ரூபாய் 48 லட்சம் செலுத்த வேண்டும் என அந்த பினான்ஸ் நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தின் வழக்கு தொடரப்பட்டது. கடந்த எட்டு ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கிற்கு தற்போது நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது அந்த தீர்ப்பில் இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவர் தம்பி சுபாஷ் சந்திரபோஸ் இருவருக்கும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது இதனை எடுத்து லிங்குசாமியை உடனே கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இணையத்தில் காட்டு தீ போல வைரலாக ஆரம்பித்தன.
இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமி தனது எக்ஸ் தல பக்கத்தில் இது தொடர்பாக ஒரு தெளிவான விளக்கம் கொடுத்திருக்கின்றார் அவர் வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கையில் என் மீதும் என் நிறுவனத்தின் மீதும் அந்த பினான்ஸ் நிறுவனம் காசோலை வழக்கு மாற்றுமுறை ஆவணச் சட்டம் 138 கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் 19 பெருநகர குற்றவியல் நீதிமன்றம் எங்களுக்கு எதிராக தீர்ப்பும் வழங்கியுள்ளார்கள் மேலும் நாங்கள் மேல்முறையீடு செய்வதற்கு 30 நாள் கால அவகாசமும் கொடுத்துள்ளார்கள் இந்த பிரச்சனையை முழுக்க முழுக்க நாங்கள் சட்டப்படி மேல்முறையீடு செய்து எதிர்கொள்வோம் எங்கள் மீதும் எங்களின் நிறுவனத்தின் மீதும் எந்த தவறும் இல்லை எங்கள் மீது போடப்பட்ட இந்த பொய் வழக்கை சட்டப்படி மேல்முறையீடு செய்ய இருக்கின்றோம் எங்கள் மீது கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக வெளியான தகவல் பொய்யானது அப்படிப்பட்ட பொய்யான செய்தியை அனைவரும் கூறி வருகின்றார்கள் அப்படியான செய்தியை பத்திரிகையாளர்கள் நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் யாரும் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன் எங்கள் மீதும் சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டும் பொய்யை எதுவும் உண்மை இல்லை என்றும் அவர் தன் தரப்பில் தன் நியாயத்தை அந்த பதிவில் தெரிவித்து இருக்கின்றார்..
