தை பொறந்தா வழி பொறக்கும்…பொங்கல் முடிந்த மறுநாளே ஒட்டுமொத்த இந்தியாவும் எங்கள் தலைவர் விஜய்யை திரும்பி பார்க்க போகிறது. அதற்கான வேலையை ஆரம்பித்து விட்டோம். செங்கோட்டையன் அதிரடி.

பொதுவாகவே சில நடிகர்களுக்கு சினிமாவில் ரசிகர்கள் கூட்டம் மிக அதிகமாக இருப்பார்கள் ஆனால் அதே நேரத்தில் அவர்கள் திடீரென அரசியலுக்குள் அடியெடுத்து வைக்கின்ற போது அந்த அளவிற்கு ரசிகர்கள் இருப்பார்களா என்று கேட்டால் அது சந்தேகம்தான். உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் நடிகர் கமலஹாசனை இந்திய சினிமாவின் பிதாமகன் சகலகலா வல்லவன் என்று அனைவரும் கொண்டாடுவார்கள் ஆனால் அதே கமலஹாசன் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தபின் அவர் இன்று காமெடி பீஸ் ஆகிவிட்டார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசி வரை நான் அரசியலுக்கு எப்ப வருவேன் எப்படி வருவேன்னு தெரியாது ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்னு சினிமா டயலாக் மட்டும் சொல்லியே தன் காலத்தை கழித்து விட்டார்..
புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு சினிமாவில் எவ்வளவு ரசிகர்கள் இருந்தார்களோ அதைவிட அரசியலில் ரசிகர்களும் தொண்டர்களும் பக்தர்களும் என அவருக்கு பன்முகமாக இருந்தார்கள்.. இன்னும் பல்வேறு கிராமங்களில் எம்ஜிஆர் இறந்து போகவில்லை என்று நம்புகிறார்கள் எல்லோரும் புரட்சித்தலைவர் எம்ஜிஆரை கடவுளாக பார்க்க ஆரம்பித்தார்கள். திராவிட கழகத்தில் இருக்கின்ற போது கலைஞர் கருணாநிதி உயிரைக் கொடுத்து பேசுவார் அப்போதெல்லாம் கூடாத கூட்டம் எம்ஜிஆர் அங்கே வந்துவிட்டார் என்ற செய்தி தெரிந்ததும் அவருடைய முகத்தை பார்ப்பதற்காகவே மொத்த கூட்டமும் அங்கே ஒன்று கூடும் அந்த அளவிற்கு மக்களின் செல்வாக்கை பெற்றிருந்தார். சினிமாவிலும் நம்பர் ஒன் அரசியலிலும் நம்பர் ஒன் என்று தன்னை நிரூபித்தவர். அதற்குப் பின் ஒரு மிகப்பெரிய சக்தியாக புரட்சி கலைஞர் விஜயகாந்த் அரசியலில் அடி எடுத்து வைத்தார். கலைஞர் ஜெயலலிதா இருக்கின்ற காலகட்டத்திலேயே அவர் எதிர்க்கட்சித் தலைவராகி மாஸ் காட்டினார். அடுத்த முதலமைச்சர் விஜயகாந்த் என்று மக்கள் அனைவரும் பேச ஆரம்பித்தார்கள். அந்த நேரம் பார்த்து திடீரென விஜயகாந்துக்கு உடல் நலம் சரியில்லாமல் போக அப்போது அவர் பேட்டிகளில் பேசுகின்ற போது அவரை குடிகாரன் என்றும் நிதானம் இல்லாமல் இருக்கிறார் என்றும் இப்படிப்பட்ட ஒருவரை தமிழ்நாட்டில் நீங்கள் முதலமைச்சர் ஆக வேண்டும் என்றும் மீடியாக்களின் செல்வாக்கால் அவரை அரசியல் கோமாளி போல் ஆக்கி ஒன்றும் இல்லாமல் செய்தார்கள் இருந்தாலும் கேப்டனுக்கு என்று இருந்த செல்வாக்கு குறையவே இல்லை எம்ஜிஆர் இறந்த பிறகு அவருக்கு எவ்வளவு கூட்டம் கூடியதோ அதே கூட்டம் கேப்டன் விஜயகாந்த் கூடியது..
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கக்கூடிய சூழ்நிலையில் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு விடிவு காலம் வந்து விடாதா என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்ற வேளையில் இந்த 2026 அரசியலில் மீண்டும் தமிழக மக்களுக்கு யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்ற ஒரு பந்தயம் துவங்கியிருக்கின்றது அந்த பந்தயத்தில் தவிர்க்க முடியாத போட்டியாளராக மாறி ஆளுங்கட்சியையும் மிரள வைத்திருக்கிறார் தளபதி விஜய்..
தற்போது தமிழ்நாடு விரைவில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளது அரசியல் கட்சிகள் தங்களின் வியூகங்களுடன் களத்தில் பரபரப்பாக இருக்கின்றார்கள் அரசியலில் புதுவரவு தளபதி விஜய். ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் தளபதி விஜய் பேசுகின்ற போது பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார் அது அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.
கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பணி தொடர்பாக அவர் சில முக்கிய விஷயங்களையும் பேசினார். அப்போது அவர் சொல்கின்ற போது தமிழ்நாட்டில் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் ஒரு கருத்தை முன் வைக்கிறார்கள் எங்களை பார்த்து தவழும் குழந்தை என்று திமுக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். அதே நேரத்தில் களத்தில் யார் இருக்கிறார்கள் என்ற எங்களின் தலைவரின் விமர்சனத்திற்கு தமிழக வெற்றிக்கழகம் களத்தில் இல்லாத கட்சி என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். இது பற்றி செங்கோட்டையன் பேசும்போது நாங்கள் களத்தில் இருக்கிறோமோ இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தான் உறுதி செய்யும். தமிழக வெற்றி கழகத்தின் அடுத்த பொதுக்கூட்டம் குறித்து இன்று மாலை எங்கள் தலைவரிடம் பேசிவிட்டு எந்த இடம் எந்த தேதி உள்ளிட்டவற்றை முடிவு செய்வோம் எங்களை பொறுத்தவரையிலும் 2026 பொங்கல் பண்டிகை நிறைவடைந்த பிறகு தாவே கவின் ஆட்டம் இன்னும் அதிரடியாக தொடரும் தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படும் அதைப் பார்த்து மொத்த இந்தியாவும் வியக்கும் என்று அவர் பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது..