சற்றுமுன் நடிகர் ரஜினிகாந்தை உலுக்கி எடுத்து அதிர்ச்சியில் உறைய வைத்த மரணம். பிரபல மலையாள நடிகர் சற்றுமுன் சிகிச்சை பலனின்றி காலமானார்

சினிமா என்பது ஒரு மிகப்பெரிய கடல் போன்றது. அந்த கடலில் கணக்கிட முடியாத அளவிற்கு எப்படி ஏகப்பட்ட உயிர்கள் வாழ்கின்றதோ அதேபோன்றுதான் சினிமாவையே நம்பி வாழ்கின்றவர்கள் பல பேர் இருக்கிறார்கள். சினிமாவையே தன்னுடைய உயிர் மூச்சாக நினைப்பவர்களும் பல பேர் இருக்கிறார்கள். எத்தனையோ நடிகர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் யாரோ ஒரு சில நடிகர்கள் மட்டும்தான் மக்களுடைய மனதில் நீங்கா இடம் பிடிப்பார்கள்.. ஒரு நடிகர் ஹீரோவாக நடிப்பதும் வில்லனாக நடிப்பதும் மிக எளிது ஆனால் அதே நேரத்தில் குணச்சித்திர நடிகராகவும் காமெடி கதாபாத்திர நடிகராகவும் நடிப்பது மிக மிக சிரமம் காரணம் அதற்கென்று ஒரு தனி மெனக்கிடல் மிக அதிகமாக செய்ய வேண்டியதற்கும் அதை எல்லா நடிகர்களும் செய்ய முடியாது..
உலகில் இருக்கக்கூடிய அனைத்து சினிமாக்களுக்கும் இன்று ஒரு முன்னுதாரணமாக இருக்கக்கூடிய சினிமா மலையாள சினிமா என்று சொல்லலாம் காரணம் அவர்கள் கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அந்த கதைக்கு மட்டும்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் அதனால் தான் அங்கு எடுக்கக்கூடிய படங்கள் அனைத்தும் மிக சிறிய பட்ஜெட் அளவில் இருந்தால் கூட சூப்பர் டூப்பர் ஹிட் ஆகின்றது அங்கு இருக்கக்கூடிய சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு கூட சம்பளம் என்பது மிக குறைவு தான். அதனால் தான் மலையாள சினிமா இன்னும் உயிர்ப்போடும் ஆரோக்கியத்துடனும் இருக்கின்றது..
இன்று காலை ஒரு அதிர்ச்சியான செய்தி வெளியாகியிருக்கின்றது. சினிமா நடிகர் எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட மலையாள பிரபலம் சீனிவாசன் உடல் நலக்குறைவால் இறந்து போய் உள்ளார். பிரபல மலையாள சினிமா நடிகர் சீனிவாசன் மறைவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த் அவரைப் பற்றி சொல்கின்ற போது நானும் சீனிவாசனும் சினிமா இன்ஸ்டிடியூட்டில் வகுப்பு தோழர்களாக ஒன்றாக படித்தோம் பழகினோம் மிக அற்புதமான நண்பர் சினிமா நடிகர் எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட சீனிவாசன் இன்று திடீரென இறந்து போய்விட்டார் என்ற செய்தியை கேட்டு நான் மிகவும் அதிர்ந்து போனேன் சிலருடைய மரணத்தை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது அது போன்ற ஒரு ஒரு உணர்வு தான் இப்போது எனக்குள்ளே இருக்கின்றது நேற்று தான் நாங்கள் இருவரும் ஒன்றாக இன்ஸ்டியூட்டில் படித்தது போன்று இருக்கின்றது ஆனால் இன்று அவர் இறந்து போய்விட்டார் என்று தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருந்தார்..
50 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் இருந்த சீனிவாசன் கிட்டத்தட்ட 225 திரைப்படங்களில் நடித்துள்ளார் உடல் நல பிரச்சனையால் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்த போது இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 69.
தமிழில் லேசா லேசா புள்ள குட்டிக்காரன் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார் லேசா லேசா படத்தில் இவரின் காமெடி காட்சிகளை யாராலும் மறக்க முடியாது என்றே சொல்லலாம் இயல்பான நடிப்பு மற்றும் முகபாவனைகள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மலையாள சினிமாவில் பல்வேறு படங்களில் முக்கிய படங்களில் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலச்சேரிக்கு அருகில் உள்ள பட்டியத்தில் ஏப்ரல் 6 1956-ல் பிறந்தவர் சீனிவாசன் மலையாள சினிமாவில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக இருந்து வந்தார். சீனிவாசன் ஒரு தேசிய விருது 2 பிலிம் பேர் விருதுகள் மற்றும் ஆறு முறை கேரளா அரசு விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..