அவதார் 3 படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை ஆயிரம் கோடிகளா ? செம்ம மாஸ்..
டைட்டானிக் என்ற திரைப்படத்தின் மூலம் உலகம் முழுக்க மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு இயக்குனர் தான் ஜேம்ஸ் கேமரூன். தமிழ் சினிமாவில் 100 படத்திற்கு எவ்வளவு செலவாகுமோ அந்த மொத்த செலவும் இவர் எடுக்கக்கூடிய ஒரே ஒரு படத்திற்கு மட்டும் ஆகும்.. உலகப் புகழ்பெற்ற இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் அவதார் 3. பெரிய எதிர்பார்ப்போடு நேற்று உலகம் முழுவதும் வெளியாகி பலரிடம் ஓரளவுக்கு நல்லபடியான விமர்சனத்தையே பெற்றிருக்கின்றது இந்நிலையில் அப்படம் இந்தியாவில் முதல் நாளான நேற்று மட்டும் எத்தனை ஆயிரம் கோடிகள் வசூல் செய்திருக்கிறது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்ப்போம்..
நடிகர்களில் ரஜினிகாந்த், விஜய், அஜீத் எப்படி சூப்பர் ஸ்டார்களோ அதே போன்று இயக்குனர்களில் உலக சூப்பர் ஸ்டார் வரிசைகளில் முக்கியமான ஒருவர்தான் ஜேம்ஸ் கேமரூன் உலக அளவில் பேமஸான இயக்குனர்களில் ஒருவர் என்றே சொல்லலாம் அவர் இயக்கத்தில் வெளியான டைட்டானிக் உள்ளிட்ட படங்கள் எல்லாம் இன்று வரை உலகம் முழுவதும் இருக்கும் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன அவர் வேற்று கிரகவாசிகளை அடிப்படையாக வைத்து அவதார் படத்தை கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்கினார் கதை ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் வணிக ரீதியாகவும் இந்த படம் சூப்பர் ஹிட் பெற்றது மெகா பிளாக்பஸ்டர் ஆனது முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றி அவரை அடுத்த பாகம் எடுக்கத் தூண்டியது அதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டு அவதார் என்ற பெயரில் இரண்டாவது பாகத்தை எடுத்தார் முதல் பாகத்தில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்த கேமராவும் இரண்டாம் பாகத்தில் தொழில்நுட்பம் உள்ளிட்ட விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரவேற்பை பெற்றார் அதேசமயம் கதை ரீதியாக அந்த படத்துக்கு பெரிய ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை இருந்தாலும் அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது..
இரண்டு பாகங்களின் வெற்றியும் ஜேம்ஸ் கேமரூன் உற்சாகத்தை கொடுக்க இதன் மூன்றாவது பாகமான அவதார் – 3 திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார், முதல் பாகத்தில் காடு, இரண்டாவது பாகத்தில் ஆழ்கடலை ரசிகர்களுக்கு விருந்தாக படைத்த கேமரூன் இந்த பாகத்தில் அவற்றோடு சேர்த்து எரிமலைகளையும் கண்களுக்கு விருந்தாக வைத்திருக்கிறார் சல்லியுடன் வளரும் தனது மகனை அழைத்துச் செல்லவும் சல்லியை கொன்று பண்டோரா உலகத்தை கைப்பற்றவும் மீண்டும் மகிழ்ச்சி நினைவோடு வரும் அவதார் அங்கிருக்கும் தொழில்நுட்பங்களை சமாளித்து தனது பண்டோராவை சல்லி எப்படி காப்பாற்றுகிறான் என்ற அவுட் லைனில் இந்த பாகத்தை உருவாக்கி இருக்கின்றார். இந்த படமானது உலகம் முழுவதும் நேற்று பிரமாண்டமாக வெளியானது இரண்டு பாகங்களுக்கும் எப்படி ரசிகர்கள் ஆர்வமாக சென்றார்களோ அதே போல் தான் இதற்கும் சென்றார்கள் அதேசமயம் படம் பார்த்த ரசிகர்களுக்கு முழு திருப்தியும் கிடைக்கவில்லை ஆனால் தொழில்நுட்ப ரீதியாக இப்படத்திலும் கேமரூன் புகுந்து விளையாடி இருக்கிறார் என்று படம் பார்த்தவர்கள் கூறுகிறார்கள் மேலும் இரண்டாவது பாகத்தை விடவும் கதை ரீதியாக இது கொஞ்சம் நல்லடிப்பதாகவும் ஒரு கருத்து நிலவுகின்றது இந்தியாவை பொறுத்தவரை அவதார் படத்திற்கென்று ஏகப்பட்ட பேர் ரசிகர்களாக இருக்கின்றார்கள். இந்த நிலையில் இங்கு முதல் நாளில் அவதார் திரைப்படம் செய்திருக்கும் வசூல் இந்தியாவில் மட்டும் 20 கோடியாம் அதே நேரத்தில் உலகம் முழுவதும் ஒரே நாளில் ஆயிரம் கோடி வசூல் செய்திருக்கிறது என்ற தகவலும் வெளியாகி உள்ளது..
