மொதல்ல நீ ஒன்னோட புருஷன டைவர்ஸ் பண்ணு.. அதற்கு சட்டென்று சின்மயி கொடுத்த பதிலடி.!

நல்ல திறமை இருந்தும் அடுத்தடுத்து பெரும் சர்ச்சைகளில் சிக்கிய பாடகிதான் சின்மயி.. மீ டூ விவகாரத்தில் வைரமுத்துவை பற்றி இவர் சில அடுக்கடுக்கான புகார் கலை சொல்லி இருந்தார்.. அதில் வெளி உலகத்திற்கு தன்னை பெரிய மனிதர்களாக காட்டிக் கொண்டு உள்ளுக்குள்ளே சில்லரைத்தனமான பல வேலைகளை செய்கிறார்கள். அவர்களின் முழு சுயரூபத்தையும் தோலுரித்துக் காட்டுவதற்காகதான் நான் இந்த மீட்டு விவகாரத்தில் தைரியமாக எனக்கு ஏற்பட்ட அநீதியை உங்களிடம் சொல்கிறேன் என்று அவர் எப்போது சொல்ல ஆரம்பித்தாரோ அப்போதிலிருந்தே பிரச்சினைகளும், சர்ச்சைகளும் அவரை சூழ்ந்து கொள்ள ஆரம்பித்தது.. பல ஆண்டுகளுக்குப் பிறகு தக்லைப் பட இசை வெளியீட்டு விழாவில் அவர் மேடையில் பாடிய முத்தமழை சாங் அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது.. ஏண்டா இப்படிப்பட்ட ஒரு குரலுக்கு இத்தனை நாள் தடை போட்டிருக்கீங்க என்று நெட்டிஷன்கள் தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்து வந்தனர்.. இதுஒருபக்கமிருக்க சின்மயி தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் அதஉ என்னவென்றால் நடிகை நிதி அகர்வால், நடிகர் பிரபாஸ் நடிக்கும் தி ராஜா சாப் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்து கிளம்பும் போது அவர் கிட்ட நெரிசலில் சிக்கி கஷ்டப்பட்டுள்ளார்.
ரசிகர்களின் செயலை கண்டித்து பலர் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

இதற்கு பாடகி சின்மயி, கழுதைப்புலிகளை விட மோசமாக நடந்துகொள்ளும் ஒரு கும்பல் ஆண்கள்.
உண்மையில், கழுதைப்புலிகளை சொல்லி ஏன் அவமானப்படுத்த வேண்டும்? ஒரே மனப்பான்மை கொண்ட ஆண்களை ஒரு கும்பலாகச் சேர்த்தால், அவர்கள் ஒரு பெண்ணை இப்படித்தான் துன்புறுத்துவார்கள். ஏதாவது ஒரு கடவுள் இவர்களையெல்லாம் அழைத்துச் சென்று வேறு ஒரு கிரகத்தில் ஏன் விடக்கூடாது? என்று ஒரு பதிவினை போட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்ஸ் ஒருவர், நீங்கள் ஆண்களின் மீது இவ்வளவு வெறுப்பு கொண்டவராக இருந்தால், ஏன் உங்கள் கணவரை விவாகரத்து செய்துவிட்டு வாழக்கூடாது, அது இன்னும் சிறப்பாக இருக்குமே என அவர் கலாய்த்து கருத்தை பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவிற்கு சின்மயி, நான் அந்த ஆண்களைப் போல பாலியல் குற்றவாளியை திருமணம் செய்துகொள்ளவில்லை. அவர்களில் ஒருவரைப் பெற்றெடுக்கவும் இல்லை. அப்படி இருக்கும் போது, நான் ஏன் விவாகரத்து செய்ய வேண்டும்? நான் பாலியல் குற்றவாளிகள், கற்பழிப்பாளர்கள், துஷ்பிரயோகம் செய்பவர்களைப் பற்றி மட்டுமே பேசுகிறேன்.
நீங்கள் ஏன் அவர்களைப் பாதுகாக்க ஓடி வருகிறீர்கள்? நீங்கள் ஒரு பெண்ணையோ அல்லது ஒரு குழந்தையையோ பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியவரா என்று பதிலடி கொடுத்துள்ளார் பாடகி சின்மயி. சமூக வலைதளங்களில் இந்த பதிவு காட்டு தீ போல வைரலாகி வருகின்றது.