இப்டி கருப்பா இருக்கவ என் குடும்பத்துக்கு மருமகளா இருக்க முடியாது என துரத்தியடித்த மாமியார்: அடுத்து மருமக செஞ்சதுதான் செம்ம ட்டுவிஸ்ட்டு.!

நாகரிக மாற்றம் கலாச்சார மாற்றம் தொலைநோக்கு சிந்தனை பெண்ணிய சிந்தனை இவை எல்லாம் முன்னேற்றம் அடைந்திருக்கின்றன என்று பேசப்பட்டாலும் இன்னும் ஒரு சில இடங்களில் மிகவும் பிற்போக்குத்தனமான வன்கொடுமைகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.. உண்மையான அன்புக்கு நிறம் தேவையில்லை இனம் தேவையில்லை மொழி தேவையில்லை என்று சொல்லி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அப்படி இருக்கும் சூழ்நிலையில் ஒரு பெண்ணின் நிறம் குறித்து அதுவும் அந்தப் பெண் மிகவும் கருப்பாக இருக்கின்ற ஒரே காரணத்திற்காக தங்கள் குடும்பத்திற்கு மருமகளாக இருப்பதற்கு தகுதியே இல்லை என்று வீட்டை விட்டு வெளியே துரத்தியடித்த சம்பவம் பேர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இந்த காலத்திலும் இப்படி இருப்பார்களா என்று எல்லோருக்கும் நினைக்கத் தோன்றும் அது எங்கே நடந்தது என்பதைப் பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம்…

ஆந்திர மாநிலத்தில் நிறவெறி மற்றும் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் ஒருவர் வீட்டை விட்டு விரட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் வினுகொண்டா பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரராவ் என்பவருக்கும், கோபிலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த ஜூன் மாதம் விமரிசையாகத் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது கோபிலட்சுமியின் பெற்றோர் 25 பவுன் தங்க நகைகள் மற்றும் 12 லட்ச ரூபாய் ரொக்கப்பணத்தை வரதட்சணையாகக் கொடுத்துள்ளனர். ஆனால், திருமணமான மூன்று மாதங்களிலேயே கோபிலட்சுமியின் நிறத்தைக் காரணம் காட்டி கணவர் மற்றும் மாமியார் வீட்டார் அவரைச் சித்ரவதை செய்யத் தொடங்கியுள்ளனர்.

கோபிலட்சுமி கருப்பு நிறத்தில் இருப்பதால் அவரைத் தனது மகனுக்குப் பிடிக்கவில்லை என்று கூறி மாமியார் அடிக்கடி தகராறு செய்துள்ளார். “நீ கருப்பாக இருப்பதால் கூடுதலாக வரதட்சணை கொண்டு வர வேண்டும்” என்று கூறி அந்தப் பெண்ணை மனதளவிலும் உடலளவிலும் துன்புறுத்தியுள்ளனர். ஒருகட்டத்தில் கொடுமை தாங்க முடியாமல் தவித்த கோபிலட்சுமியை, அவரது மாமியார் வலுக்கட்டாயமாக வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளார். புகுந்த வீட்டில் தனக்கு நேர்ந்த அநீதியைக் கண்டு கொதித்தெழுந்த கோபிலட்சுமி, நியாயம் கேட்டுத் தனது கணவர் வீட்டின் முன்பே அமர்ந்து திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
மனைவி போராட்டத்தில் இறங்கியதை அறிந்த கணவர் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோர் உடனடியாக வீட்டைப் பூட்டிவிட்டுத் தலைமறைவாகினர். ஆட்கள் இல்லாத பூட்டிய வீட்டின் முன் அந்தப் பெண் நீதி கேட்டு அழுதது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்துத் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கோபிலட்சுமி அளித்த புகாரின் பேரில், அவரது கணவர் கோடீஸ்வரராவ் மற்றும் மாமனார், மாமியார் உள்ளிட்ட மூன்று பேர் மீதும் வரதட்சணை கொடுமை மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நவீன காலத்திலும் நிறத்தை வைத்து ஒரு பெண்ணைப் புறக்கணிக்கும் இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பலத்த கண்டனங்களைப் பெற்று வருகிறது.அதே நேரத்தில் அந்தப் பெண்ணின் தைரியத்தையும் போராட்ட குணத்தையும் வெகுவாக பாராட்டியும் வருகின்றார்கள்.