பர்தா போடாமல் தெருவில் நடந்து வந்ததால் ஆத்திரம் அடைந்த கணவர் தன் மனைவி, 2 மகள்களை துப்பாக்கியால் சுட்டு கொலை.. எங்கே நடந்தது தெரியுமா?
நாகரிக வளர்ச்சி ஒரு பக்கம் அடைந்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் பெண்களுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் அநீதிகளும் வன்முறைகளும் குறைந்தபாடில்லை இன்னும் சொல்லப்போனால் அது நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் இருக்கின்றது.. சிறுசிறு காரணத்திற்காக கொலைகள் இன்றைக்கு சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றன.. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் இப்போது மொத்த இந்தியாவையும் உலுக்கி இருக்கிறது என்று சொல்லலாம்.. உத்திர பிரதேசம் மாநிலம் ஷாமிலி மாவட்டம் ஹெரி தவுலத் கிராமத்தை சேர்ந்தவர் பரூக்கி. இவருக்கு கல்யாணம் ஆகி தகிரா என்ற மனைவியும் 12 வயது நிரம்பிய அப்ரின் என்ற மகளும் சகாரின் என்ற ஐந்து வயது மகளும் மொத்தம் இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர்..
இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி தன் மனைவி தகிரா புர்கா அணியாமல் வீட்டை விட்டு வெளியே தெருவில் நடந்து வந்த ஒரே ஒரு காரணத்திற்காக அவருடைய கணவர் ஆத்திரமடைந்துள்ளார்..
தன் மனைவியிடம் ஒரு பெண் இப்படி எல்லாம் இருக்கக் கூடாது இது நம் மதப்படி மிகவும் தவறான ஒன்று என்றெல்லாம் சொல்ல ஆரம்பிக்க ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய வாக்குவாதம் நடக்க ஆரம்பித்து இருக்கின்றது கடுமையான வாக்குவாதத்தில் இருவரும் சண்டை போட்டு அந்த சண்டை முற்றிப்போன நிலையில் உணர்ச்சிவசப்பட்ட பருக்கி தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் தன் மனைவி தகிராவை சுட்டுள்ளார். அதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்து போய் உள்ளார்.. இந்த கடுமையான வாக்குவாத சண்டை நடக்கும் போதே அவர்களுடைய இரண்டு மகள்களும் பருக்கியை தடுக்க முயன்றுள்ளனர் ஆனால் ஆத்திரத்தில் கண்மூடித்தனமாக பருக்கி தன் மனைவியை சுட்டுக் கொன்றதோடு மட்டுமல்லாமல் தன் மூத்த மகள் அப்ரீனையும் துடிதுடிக்க சுட்டுக் கொன்றுள்ளார்.. அதோடு மட்டுமில்லாமல் தன் இளைய மகள் சகாரினை ஈவு இரக்கமின்றி கழுத்தை நெறித்து கொலை செய்திருக்கின்றார்..
மனைவி மற்றும் தன்னுடைய இரண்டு மகள்களையும் கொன்ற பருக்கி இந்த விஷயம் வெளியே தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தன் சொந்த வீட்டிற்குள்ளேயே குழி தோண்டி அந்த மூன்று பேரின் உடல்களையும் வீட்டுக்குள்ளே புதைத்துள்ளார்.. வீட்டில் இருந்த மருமகளும் பேத்திகளும் ஐந்து நாட்களாக அவர்கள் எங்கே சென்றார்கள் என்ன ஆனார்கள் என்று தேட ஆரம்பித்து ஒரு கட்டத்திற்கு மேல் போலீசில் புகார் அளித்துள்ளனர் புகாரின் அடிப்படையில் அவர்கள் தேட ஆரம்பித்து ஒரு கட்டத்தில் பருக்கியின் மீது சந்தேகம் அடைந்து அவரிடம் விசாரணை ஆரம்பித்துள்ளனர் அந்த விசாரணையில் தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியே வந்துள்ளது..
பருக்கி போலீசாரிடம் வாக்குமூலம் கொடுக்கும் போது புர்கா அணியாமல் தன் மனைவி வீட்டை விட்டு வெளியேறியதால் தன் மனைவியையும் தடுக்க முயன்ற இரண்டு மகள்களையும் நான் ஆத்திரத்தில் கொன்று புதைத்து விட்டேன் என்று அவர் வாக்குமூலம் கொடுக்க அதைக் கேட்டு போலீசார் மற்றும் அங்கு இருக்கக்கூடிய அக்கம்பக்கத்தினர் என அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போக அதன் பின் வீட்டினுள் புதைக்கப்பட்ட மூன்று பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.. இந்த நூற்றாண்டு அறிவியல் நாகரீகம் என ஒரு பக்கம் போய்க் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் இது போன்ற கண்மூடித்தனமான காட்டுமிராண்டித்தனமான சம்பவங்களும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றது.. இந்த சம்பவம் மொத்த இந்தியாவையும் உலுக்கியுள்ளது.
