தளபதி படத்தின் 2 வது பாடல் “ஒரு பேரே வரலாறே” மில்லியனில் ட்ரெண்டிங்.!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறகு ஏன் இன்னும் ஒரு படி மேலே போய் அவரைத் தாண்டி இன்றைக்கு ஒரு மனிதன் புகழின் உச்சத்தில் இருக்கிறார் என்றால் அதுதான் தளபதி விஜய். ரஜினிகாந்த் கமலஹாசன் அனைவருமே சினிமாவில் தங்களுடைய மார்க்கெட் போன பிறகு அவர்கள் அரசியலுக்கு வர முடிவு எடுத்தார்கள் ஆனால் தளபதி விஜய் தான் உச்சத்தில் இருக்கும் போதே 200 கோடி ரூபாய் சம்பளத்தை வேண்டாம் என தூக்கி எறிந்து விட்டு என் மீது அன்பு காட்டும் இந்த தமிழக மக்களுக்கு நான் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று அரசியல் களத்தில் குதித்தார்..எம்ஜிஆர் விஜயகாந்த் வரிசையில் மக்கள் அனைவருமே தளபதி விஜயை தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்..
அதுவும் சமீபத்தில் அவர் பேசிய ஒவ்வொரு மேடையும் அதுல ஆரம்பித்தது என்றே சொல்லலாம் முழு நேர அரசியலில் இறங்கி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தளபதி எங்கெல்லாம் செல்கிறாரோ அந்த இடமெல்லாம் அவருடைய கோட்டையாக மாறிவிடுகின்றது.. அதுவும் குறிப்பாக நேற்று ஈரோட்டில் அவர் பேசிய பேச்சும் ரசிகர்களின் மீது மிக அக்கறையோடு உரிமையாக அவர் கண்டித்த கண்டிப்பும் தன் மனம் விட்டு ஒரு நண்பன் போல மக்களிடம் அவருடைய ஸ்டைலில் அவர் அரசியலைப் பற்றி பேசிய விதமும் இணையதளம் முழுக்க ஆக்கிரமித்து ட்ரெண்டாக ஆரம்பித்தது..
இதற்கேற்றார் போல் தளபதி விஜயின் கடைசி திரைப்படம் ஜனநாயகன் என்பதால் அந்த படத்தின் மீது ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எகிறி உள்ளது என்றே சொல்லலாம்.. பிளாக்பஸ்டர் மன்னன் வசூல்ராஜா என்று விஜய்யை எவ்வளவு சொன்னாலும் தகாது எச் வினோத் இயக்கத்தில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் இந்த படம் கிட்டத்தட்ட 80 சதவீதம் முடிந்து விட்டது படத்தின் முதல் பாடல் ஏற்கனவே ரிலீஸ் ஆகி சூப்பர் சூப்பர் ஹிட் ஆன நிலையில் இப்போது இரண்டாவது பாடலான ஒரு பேரை வரலாறு பாடல் ரிலீஸ் ஆகி அது வெளியான ஒரு மணி நேரத்திலேயே மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது..
ஈரோட்டில் அவர் பேசிய பேச்சு எடுத்துக்கொண்ட செல்பி ரசிகர் வெள்ளத்தில் புடை சூழ இருந்த மாஸ் இவை அனைத்தையும் தொண்டர்களும் ரசிகர்களும் எடிட் செய்து இந்த பாடல்வரிகளை அதற்கு ஏற்றாற் போல் இணைத்து மீண்டும் ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள்.. விஜய்க்கு இருக்கும் செல்வாக்கை பார்த்து ஆளுங்கட்சியும் சற்று ஸ்தம்பித்து ஆடிப் போய் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
