யோவ் விஜய்… புதுச்சேரிக்கு சொன்ன நேரத்துக்கு போன ? ஆனா ஈரோடுக்கு மட்டும் ஏன் இவ்வளவு லேட்டு? தமிழ்நாடுன்னா எளக்காரமா ?
சினிமாவில் இளைய தளபதி விஜய்யாக இருந்தவரை அவர் முடிசூடா மன்னனாக வலம் வந்தார் ஆனால் எப்போது அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தாரோ தளபதி என்று ரசிகர்கள் தொண்டர்கள் எப்போது கொண்டாட ஆரம்பித்தார்களோ அப்போது இருந்தே நடிகர் விஜயை சுற்றி விமர்சனம் எழ ஆரம்பித்துவிட்டது அதே சமயத்தில் கழுகு பார்வை அவர் மீது பட ஆரம்பித்துவிட்டது புதுச்சேரியில் நடந்த பொதுக் கூட்டத்திற்கு விஜய் சரியான நேரத்திற்கு வந்த நிலையில் இன்று ஈரோட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு 11 மணி ஆகியும் அவர் இன்னும் வரவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு காலையில் எழுந்தது அதை தொடர்ந்து தமிழ்நாடு என்றால் உங்களுக்கு தக்காளி தொக்கா போயிடுச்சா என்று விமர்சனங்களும் எழ ஆரம்பித்துவிட்டது.
கரூர் சம்பவம் நடந்த 73 நாட்களுக்கு பின் தளபதி விஜய் புதுச்சேரியில் மக்கள் சந்திப்பை நடத்தினார் சரியாக கூட்டம் நடத்தும் இடத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்பே வந்திருந்தார் ஆனால் விஜய் கூட்டம் ஆரம்பிக்க வேண்டிய இடத்திற்கு முன்பே வந்தாலும் அன்று அவர் சொன்ன நேரத்தை தாண்டியும் பேசாமல் வாகனத்தின் உள்ளே அமர்ந்து இருந்ததால் போலீசார் கடும் கோபம் அடைந்தனர் இதையடுத்து போலீஸ் தாவெக கட்சிக்கு எச்சரிக்கை விடுத்தது விஜயை பேசிவிட்டு சீக்கிரமாக போக சொல்லுங்கள் என்று போலீசார் எச்சரிக்கையும் விடுத்தார்கள்.
ஒரு கட்டத்திற்கு மேல் போலீசார் தாவேகா நிர்வாகிகளிடம் நேரடியாக விஜய்யிடம் சென்று நீங்கள் பேசுங்கள் என்று கூறியுள்ளனர் அதன்பின் புஷி ஆனந்திடம் நீங்கள் விஜய்யை பேசிவிட்டு போக சொலல்லுங்கள் மக்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது என்று சொல்ல அப்போது அங்கே வாக்குவாதம் நடக்க 40 பேர் ஏற்கனவே இறந்திருக்கிறார்கள் அதை மனதில் வைத்துக் கொண்டு உங்களுடைய கடமையை பொறுப்பாக செய்யுங்கள் என்று புஷ்ஷி ஆனந்த் சொல்ல, நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எனக்கு சொல்லாதீர்கள் என்று புஷி ஆனந்திடம் காவல் கண்காணிப்பாளர் ஈஷாசிங் கோபமாக கத்தியுள்ளார்
கால் மணி நேரத்திற்கு முன்பே விஜய் வந்து விட்டார் ஆனால் அவர் பேசவில்லை கேரவன் உள்ளேயே விஜய் இருக்கின்றார் புதுச்சேரியில் தாவெகா பொதுக்கூட்டத்திற்கு அரங்கு அமைக்க அனுமதி அளிக்கப்படாத சூழலில் விஜயின் பிரச்சார வாகனம் எது நிரந்தர மைக் பொருத்தப்பட்டிருந்தது விஜய் உள்ளேயே இருந்து கொண்டு பேசாமல் இருந்தார். இதை எடுத்து போலீஸார் கோபமடைந்தது அவரைப் பேசிவிட்டு சீக்கிரமாக செல்ல சொல்லுங்கள் என்று கோபமாக கூறினார்கள் கணக்குப்படி விஜய் 12 30 மணிக்கு புதுச்சேரியை விட்டு சென்றிருக்க வேண்டும் அதுவரை தான் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் விஜய் நேரம் கடந்தும் வராமல் காலம் தாழ்த்தினார் என்பதால் போலீசார் அவரை கண்டித்தனர் அதன்பின் சரியாக பேசிவிட்டு விஜய் அங்கிருந்து சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது..
புதுச்சேரியில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு விஜய் சரியான நேரத்திற்கு வந்த நிலையில் ஈரோடு பொதுக்கூட்டத்திற்கு நேரமாகியும் இன்னும் வரவில்லை என்று அவர் மீது விமர்சனங்கள் எழ ஆரம்பித்தது 11 மணி கூட்டத்திற்கு 6 மணியிலிருந்து மக்கள் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தில் காத்திருந்தனர் விஜய் 10:30 மணிக்குத்தான் கோவையில் இருந்தே வாகனத்தில் கிளம்பியுள்ளார் அதுவும் மிகவும் மெதுவாக வாகனம் எறும்பு போல ஊர்ந்து வந்துள்ளது கூட்டத்தை அழைத்துக் கொண்டு விஜய் வாகனத்தில் மெதுவாக வந்துள்ளார் 11 மணி முதல் ஒரு மணிக்குள் கூட்டம் நடத்தி முடிக்க வேண்டும் என போலீசார் நிபந்தனை விதித்திருந்தனர் இதனால் விஜய் சரியான நேரத்தில் பேசுவாரா என்ற கேள்வியும் ஒரு பக்கம் எழுந்து இருந்தது.. ஆனால் பல்வேறு விமர்சனங்கள் அனைத்தையும் தாண்டி இப்போது விஜய்யின் பேச்சுக்கள் அனைவரையும் ஈர்த்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது..
