நொந்து போய் உடைந்து அழுத சிங்கர் சபேஷனுக்கு நடிகை தேவயானி சொன்ன அந்த ஒரு வார்த்தை என்ன தெரியுமா??
பொதுவாகவே தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோவுக்கென்று ஒரு மிகப்பெரிய வரவேற்பு இருக்கின்றது.. தொலைக்காட்சியில் பிக் சன் நான் பிக்ஷன் என்ற இரண்டு பகுதிகள் உள்ளது அதில் ரியாலிட்டி ஷோக்கள் அனைத்தும் நான் பிக்ஷன் என்கின்ற கேட்டகிரியில் இடம் பெறும் தொலைக்காட்சி தொடர்கள் அனைத்தும் ஃபிக்சன் கேட்டகிரியில் இடம் பெறும்.. விஜய் டிவிக்கு மிகப்பெரிய அடையாளமாக மாறியது அதில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் தான்..அதேபோன்று இப்போது ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு மிகப்பெரிய அடையாளமாக மாறி இருப்பது அதில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சரிகமப ரியாலிட்டி ஷோ தான்.. ஆரம்ப காலகட்டத்தில் தங்கள் திறமையை மட்டுமே நிரூபிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட இந்த களம் இப்போது டிஆர்பிக்காக சில நேரங்களில் வைரல் ஆவதற்கு ஏடாகூடமான வேலைகளையும் செய்ய ஆரம்பித்தது.. சரியோ தவரோ ரசிகர்கள் அதைப் பற்றி பேச வேண்டும் என்பதற்காக செயற்கையாக சில விஷயங்களும் நடக்க ஆரம்பித்தன..ஒரு கட்டத்திற்கு மேல் ரசிகர்கள் இவை அனைத்தும் பக்காவாக தயார் செய்யப்பட்ட ஸ்கிரிப்ட் என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.. இருந்தாலும் அதையும் தாண்டி ரசிகர்கள் மத்தியில் இதற்கு இன்னும் அமோக வரவேற்பு இருக்கத்தான் செய்கின்றது…இந்தியாவில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆர்வமாக இருக்கும் திறமையாளர்கள் இதில் வந்து போட்டியாளர்களாக கலந்து கொள்கிறார்கள்..அப்படி ஒரு திறமையான போட்டியாளர் தான் சபேசன்…பிரபல டிவி ரியாலிட்டி ஷோவில் நடைபெற்ற சரிகமப சீனியர் சீசனில் இரண்டாவது இடத்தை பிடித்த சபேசன் நடிகை தேவயானி தன்னிடம் பேசியதை பற்றி சமீபத்தில் ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் பாடல் நிகழ்ச்சி தான் சரிகமப ஆகும். இதில் இலங்கையைச் சேர்ந்த சபேசன் என்பவர் கலந்து கொண்டிருந்தார்.
வாழ்க்கையில் வெற்றியை பார்க்காத இவர், எப்பொழுதும் தனது கஷ்டத்தை நினைத்து மேடையில் கண்கலங்கும் இவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
சரிகமப நிகழ்ச்சி மூலம் சென்னை மட்டுமின்றி இலங்கை ரசிகர்களை தனது கட்டுக்கள் வைத்திருந்தார். இவர் மேடையில் பாடும் போதும், பேசும் வார்த்தைகள், கொடுக்கும் எமேஷ்னல் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது.
இவர் இவ்வாறு எமேஷ்னலாக இந்த இடத்தைப் பிடித்து்ளார் என்று அநேகர் இழிவாக பேசிய நிலையில், அதற்கான பதிலடியை தற்போது கொடுத்துள்ளார். அதாவது தேவயானி சரிகமப செட்டில் இருக்கும் சபேசனுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
குறித்த நிகழ்ச்சி பலரது வாழ்க்கையில் மாற்றத்தினை கொண்டு வந்துள்ளது. பலரும் சபேசன் அழுது பாடுவதைக் கண்டு வீண்பழிகளை கூறிவந்தனர். இந்நிலையில், பாடகர்களாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர்.
டாப் 3 போட்டியாளர்களில் ஒருவரான சபேசன் கூறுகையில், தான் ஒரு இடத்திலும் அனுதாபத்திற்காக அழவில்லை. வாழ்க்கையில் எந்தவொரு இடத்திலும் தான் வெற்றியை பார்த்ததில்லை… அதனால் தான் அவ்வாறு அழுதுவிட்டேன்.
எதிர்மறையான கருத்துக்களைப் பார்த்து சோர்ந்து போயிருந்த போது தேவயானி மேடம் என்னிடம் வந்து நீ எந்த இடத்திலும் அழுது ஜெயிக்கவில்லை.
பாடல் பாடி அனைவரையும் மகிழ்வித்தே ஜெயித்துருக்க.. எதையும் நினைத்து கஷ்டப்படாதே… அடுத்த கட்டத்திற்கு போக வேண்டும் என்பதே உனது குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தேவயானியின் இந்த அறிவுரை சபேசனுக்கு மிகப்பெரிய உத்வேகத்தினைக் கொடுத்துள்ளதாக பேசியுள்ளார்.அதே நேரத்தில் பல்வேறு தாய்மார்களுக்கு நடிகை தேவயானி மிகப்பெரிய ஒரு ரோல் மாடலாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது…
