இந்த கானா வினோத் பெண்களை தப்பான எண்ணத்தில் கண்ட இடத்துல தடவுறாரு.. வைரலாகும் ரம்யாவின் வீடியோ

மேற்கத்திய கலாச்சாரங்கள் தற்போது இந்தியாவில் அதிகமாக பரவி வருகின்றது.. அயல்நாட்டு ரியாலிட்டி ஷோ ஒன்றின் மூலமாக பிரபலம் அடைந்தவர் தான் நடிகை சில்பா செட்டி.அந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் மிகவும் அதிகமாக பிரபலமடைந்து உலக அளவில் புகழின் உச்சத்திற்கு சென்று வைரலாகவும் ஆனார்.. அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை இந்தியாவில் கொண்டு வர வேண்டும் என்று டிஆர்பிக்காக போட்டி போடும் சேனல்கள் யோசிக்க ஆரம்பித்தன..அப்படி இந்தியா முழுக்க கொண்டுவரப்பட்ட ஒரு ஷோ தான் பிக் பாஸ்..தமிழில் ஒளிபரப்பாகும் பிக் பாஸை பொறுத்தவரை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய போது ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் ரசிகைகள் பட்டாளமே இருந்தது..வார இறுதி நாட்களில் கமல் தன்னுடைய கேள்விக்கணைகளால் அவர்களைப் பட்டும் படாமல் அதே நேரத்தில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் மிக நாகரிகமான முறையில் குறும்படம் எல்லாம் போட்டு காட்டி அவருக்கே உரித்தான பாணியில் அதைக் கொண்டு சென்றார் அதனால் அந்த ரியாலிட்டி ஷோ சூப்பர் சூப்பர் ஹிட் ஆனது.. ஆனால் அதே நேரத்தில் கமலஹாசன் முழு நேர அரசியலில் இறங்கிய பிறகு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக விஜய் சேதுபதி வந்தார்..போன சீசனில் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது ஓகே என்றும் சொல்லும் அளவிற்கு இருந்தது ஆனால் தற்போதைய சீசன் இருப்பதிலேயே மிகவும் மட்டமான சீசன் என்று பெயர் எடுத்துள்ளது அதைத் தாண்டி விஜய் சேதுபதியின் மீதும் நிறைய விமர்சனமும் எழுந்தது..ஒரு கட்டத்தில் ரசிகர்கள் அனைவரும் மீண்டும் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் வந்து தொகுத்து வழங்கினால்தான் அது சிறப்பாக அமையும் என்று தங்களுடைய கருத்துக்களையும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்..

இது ஒரு பக்கம் இருக்க பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இவர் தான் டைட்டிலை வெல்வார் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் யாரும் இதுவரை விளையாடவில்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ரம்யா மற்றும் வியானா டபுள் எவிக்‌ஷன் முறையில் வெளியேறினர். பிக்பாஸ் மேடைக்கு வந்த ரம்யா, கனியை பார்த்து ’பச்சயா நடிக்காத’ என்று சொன்னது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ரம்யா ஏன் கனியை பார்த்து அப்படி சொன்னார். அப்படி அவர் சொல்ல காரணம் என்ன என இணையத்தில் பல கேள்விகள் மேலோங்கியது. கனியை தவறாக எதுவும் சொல்லவில்லை விளையாட்டாக தான் அப்படி சொல்லியதாக ரம்யா விளக்கமும் கொடுத்திருந்தார். இந்நிலையில், கானா வினோத், ரம்யாவை கட்டிப்பிடித்தது தொடர்பான சர்ச்சைக்கு ரம்யா விளக்கமளித்துள்ளார்.

ப்ரோவோக்ட் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் பேசியதாவது, “கானா வினோத் எனக்கு சொந்த அண்ணன் மாதிரி. அவர் பெண்களை எல்லாம் தவறாக தொடவில்லை. அவருக்கு என்று ஒரு பெயர் இருக்கிறது, அதை கெடுக்க வேண்டாம். அவர் என்னைக்கும் என்னை தப்ப தொட்டது இல்லை பேசுனதும் இல்லை. ஒருவர் நம்மை தொடும்போதே நமக்கு தெரியும் அவர் எந்த மாதிரி நோக்கத்தில் நம்மை தொடுகிறார் என்று. எனக்கு பொதுவாகவே பேட் டச் என்றால் சீக்கிரம் தெரிந்துவிடும். நான் அந்த நபரை தவிர்த்துவிடுவேன். அதன் மாதிரி இருக்கும் பொழுது வினோத் தவறாக தொடுகிறார் என்றால் எனக்கு அடிக்க தெரியாதா அவரை? 
கானா வினோத் அந்த மாதிரி என்னிடம் பழகவில்லை. சாப்பாடு, துணிகள் எல்லாம் எங்களிடமிருந்து வாங்கி கொடுக்கும் டாஸ்கின் போது எனக்கு வயிற்று போக்கு ஏற்பட்டது. அப்போது நிறைய உப்பு போட்ட சூப்பை நான் குடித்தேன். எனக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டாலும் நான் அந்த சூப்பை குடித்தேன் என்று கானா வினோத் என்னை கட்டிப்பிடித்து சமாதானப்படுத்தினார். கண்டிப்பாக வினோத் அப்படி இல்லை. கானா வினோத் அவர் மனைவி மீது அவ்வளவு பாசம் வைத்துள்ளார்” என்றார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.