விஜய் டிவி செல்லம்மா சீரியல் நடிகைக்கு டும் டும் நடந்து முடிந்தது..மாப்பிள்ளை யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
ஒரு காலகட்டத்தில் சினிமா நடிகர் நடிகைகளுக்கு எப்படி மிகப்பெரிய ரசிகர்கள் ரசிகர்கள் பட்டாளம் இருந்ததோ அதே போன்று ஏன் இன்னும் ஒரு படி மேலே போய் சொல்ல வேண்டும் என்றால் அதற்கு மேலேயே சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கும் சோசியல் மீடியா பிரபலங்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் ரசிகைகள் பட்டாளம் உண்டு.. அப்போதெல்லாம் சினிமாவில் யாராவது நடிகர் நடிகைகளாக வேண்டுமென்றால் அதற்கென்று மிகப்பெரிய மெனக்கிடல் இருந்தது. ஆனால் இன்றைக்கு பிரபலமடைந்தாலே சினிமாவில் வாய்ப்புகள் எளிதாக கிடைத்து விடுகின்றது..
சீரியல் என்றாலே ஆரம்ப காலகட்டத்தில் சன் டிவி என்ற ஒன்று மட்டும் தான் இருந்தது. ஆனால் கால மாற்றத்தில் இன்றைக்கு அதற்குப் போட்டியாக நிறைய சேனல்களும் வர ஆரம்பித்துவிட்டன.. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதலில் நம்பர் ஒன் சேனலாக இருப்பது சன் டிவி, இரண்டாவது விஜய் டிவி..சன் டிவி சீரியல்களுக்கு எப்படி ரசிகர்கள் ரசிகைகள் அதிகமாக இருக்கிறார்களோ அதற்கு இணையாக விஜய் டிவிக்கென்று ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு..அதுவும் அந்த சீரியலில் ஏதாவது ஒரு பங்க்ஷன் நடக்கிறது என்றால் அது தங்கள் வீட்டிலேயே நடப்பது போன்று ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள்..ரீல் வாழ்க்கை நடப்பதையே கொண்டாட ஆரம்பிக்கும் ரசிகர்கள் அந்த ரீலில் நடித்த நடிகைக்கு நிஜமாகவே திருமணம் நடந்தால் சும்மா விட்டு வைப்பார்களா?? அந்த நடிகைக்கு தொடர்ந்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்..விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் செல்லம்மா..
விஜய் டிவியின் செல்லம்மா நடிகை ஸ்ரேயா சுரேந்திரன் தனது காதலர் ரோஹித்தை கடந்த ஞாயிற்றுகிழமை திருமணம் செய்து கொண்டார். சன் மியூசிக் தொலைக்காட்சியின் விஜேவாக தன்னுடைய பயணத்தை தொடங்கிய ஸ்ரேயா சுரேந்திரன். அதைத்தொடர்ந்து சூர்யா தொலைக்காட்சியில் சீரியலில் நடிகையாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து, செல்லம்மா சீரியலில் வில்லியாக மேகனா என்ற ரோலில் நடித்தார். இவரின் ரோல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
செல்லம்மா முடிவடைந்ததை தொடர்ந்து, ஸ்ரேயா சுரேந்திரன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிலையில் கலந்து கொண்டு வந்தார்.
ஸ்ரேயா சுரேந்திரனுக்கும் அவரது காதலர் ரோஹித்துடன் ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
இதையடுத்து கடந்த ஞாயிற்றுகிழமை, நடிகை ஸ்ரேயா சுரேந்திரன் மற்றும் ரோஹித்தின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
திருமணத்திற்கு முன்பாக நடந்த நலங்கு நிகழ்ச்சியில் செல்லம்மாள் டீம் நீச்சல் குளித்தும் ஒட்டுமொத்தமாக குறித்து ஆட்டம் போட்டுள்ளனர்.. இந்த புகைப்படமும் காணொளியும் இணையதளத்தில் தீயாய் வைரலாகி வருகின்றது..
