இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.. டிசம்பர் 17 இன்று உங்கள் ராசிக்கு நடக்கப் போகின்ற சோதனைகளும்!. சாதனைகளும்!.
மேஷம் :
மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுறுசுறுப்பு தேவை. மந்தமாக இருக்கக் கூடாது. தாமதத்தால் சில பல பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது. முக்கியமான வேலைகளுக்கு அரை மணி நேரம் முன்கூட்டியே செல்லவும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனத்தோடு செயல்படுங்கள்.
ரிஷபம் :
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நிதானம் தேவை. நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு தேவையற்ற எதிர்ப்புகள் வரும். பிரச்சனைகள் வரும். அதையெல்லாம் நிதானமாக சமாளிக்க வேண்டிய பக்குவம் உங்களிடத்தில் இருந்து வெளிப்பட வேண்டும். முன்கோபம் வேண்டாம். நிதானதோடு செயல்பட்டால் இன்று நன்மை நடக்கும்.
மிதுனம் :
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் திறமையாக செயல்படுவீர்கள். நல்லது நடக்கும் நாள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும்.
கடகம் :
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வருமானம் பெருகும் நாளாக இருக்கும். செல்வ கடாட்சம் நிறைவாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்மணிகளுக்கு கொஞ்சம் வேலை பளு அதிகமாக தான் இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் காட்டுங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும்.
சிம்மம் :
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். பெரியவர்களின் ஆசிர்வாதம், கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். கமிஷன் தொழில் வெற்றிகரமாக செல்லும்.
கன்னி :
கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத சம்பள உயர்வு பதவி உயர்வு இடமாற்றத்தோடு கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீச தொடங்கக் கூடிய நாள். தேவையானதை சாதித்துக் கொள்ளுங்கள்.
துலாம் :
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன பயம் இருக்கும். பதட்டம் இருக்கும். புது முடிவுகளை எடுக்க வேண்டாம். அன்றாட வேலையில் கவனம் செலுத்துங்கள். இறை வழிபாடு செய்யுங்கள். பதட்டத்தில் எந்த சூழ்நிலையிலும் பொய் சொல்லாதீங்க. நேர்மையாக நடந்து கொண்டால் பிரச்சனை இல்லை.
விருச்சிகம் :
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று ஆர்வமாக இருப்பீர்கள். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். புது நண்பர்களோடு பேசி பழகுவதிலும் உங்களை மிஞ்ச ஆள் இருக்காது. வசீகரம் வெளிப்படும் நாள். பேச்சு திறமை வெளிப்படும். வழக்கறிஞர்கள் கலைஞர்களுக்கு இன்று அபரிவிதமான முன்னேற்றம் இருக்கும்.
தனுசு :
தனுசு ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று சந்தோஷம் இருக்கும் நாள். உற்சாகம் வெளிப்படும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். சிக்கல்கள் நீங்கும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். மனதிற்கு பிடித்த நபரோடு நேரத்தை செலவு செய்வீர்கள். நீண்ட தூர பயணங்களை மட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள். தவிர்க்க முடியாத பயணம் என்றால், பயணத்தின் போது கவனம் இருக்கட்டும்.
மகரம் :
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முதலீடுகளை மேற்கொள்ளலாம். புதுசாக தொழில் தொடங்க முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது வேலை தேடவும் முயற்சி செய்யலாம். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். வீட்டிற்கு தேவையான பொன் பொருள்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.
கும்பம் :
கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மன நிம்மதி இருக்கும். நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். சொன்ன வாக்கை காப்பாற்றுவீர்கள். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். இறை வழிபாடு மனதிற்கு அமைதியை தரும். கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும். நீண்ட நாள் பண பிரச்சனை தீரும்
மீனம் :
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் கிடப்பில் போட்டிருந்த வேலைகளை சரிவர செய்து முடிப்பீர்கள். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். நிம்மதி கிடைக்கும்.
