விஜய் – த்ரிஷா இருவரும் ரகசியமாக கோவாவிற்கு சென்ற பேசஞ்சர் லிஸ்ட் சற்றுமுன் வெளியாகி ட்ரெண்டிங்.!

சிறு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடிகர் விஜய்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு.. ஒரு காலகட்டத்திற்கு பிறகு அவர் நடிப்பில் வெளியாகின்ற படங்களை ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடித் தீர்த்தார்கள்..இன்னும் ஒரு படி மேலே சொல்ல வேண்டும் என்றால் வசூலிலும் சரி, ஸ்டைலிலும் சரி, தனக்கான மார்க்கெட்டிலும் சரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையே இவர் மிஞ்சி விட்டார் என்று சொல்லலாம்.. விநியோகஸ்தர்கள் அனைவருமே நடிகர் விஜய்யை பாக்ஸ் ஆபீஸ் கிங் என்று சொல்வார்கள்.. அவர் நடிப்பில் இப்போது வெளியாக இருக்கக்கூடிய கடைசி திரைப்படம் ஜனநாயகன்..இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது..காரணம் நடிகர் விஜய்யின் தற்போதைய அரசியல் பிரவேசம்.. விஜய் எப்போது அரசியலில் அடி எடுத்து வைத்தாரோ முழு நேரமாக அவர் எப்போது உள்ளே வந்தாரோ அப்போதிலிருந்தே அவருக்கான அழுத்தமும், விமர்சனமும், மன உளைச்சலும் அதிகமானது என்றே சொல்லலாம்…
மற்ற கட்சியில் இருப்பவர்கள் மூட்டை மூட்டையாக பணத்தைக் கொட்டி ஆள் பிடித்து கூட்டம் சேர்ப்பார்கள்..ஆனால் தளபதி விஜய்க்காக தமிழ்நாட்டில் இருக்கும் மூளை முடுக்குகளில் இருந்து ரசிகர்கள் பெரும் படையெடுத்து வர ஆரம்பித்து விட்டார்கள். தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட வேண்டும் அது நடிகர் விஜய்னால் மட்டும்தான் கொண்டு வர முடியும் என்று அவருடைய ரசிகர்கள் அனைவரும் அவருக்கு புகழாரம் சூட்டுகிறார்கள்..
கரூர் விவகாரத்தில் நடிகர் விஜயின் நிலைப்பாடு குறித்து பெரும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அப்போதும் அவர் அமைதியாகவே மௌனம் காத்தார்…
நடிகர் விஜயுடன் எந்தெந்த கட்சி கூட்டணி அமைக்கப் போகின்றது என்று தமிழ்நாட்டில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் அதிமுகவில் ராஜினாமா செய்துவிட்டு விஜயினுடைய கட்சியில் இணைந்தார் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் அம்மாவின் விசுவாசி செங்கோட்டையன்.. தமிழக அரசியலில் இது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.. இன்னும் விஜயுடன் மிகப்பெரிய பட்டாளத்தை ஒன்று திரட்டுவேன் என்று செங்கோட்டையன் மேடைகளில் சூலூரை செய்தார்.. தேர்தல் நெருங்க நெருங்க தனிப்பட்ட தாக்குதல்களும் விமர்சனங்களும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கின்றன.. அந்த விதத்தில் இப்போது ஏற்கனவே நடந்து முடிந்த ஒரு விஷயத்தை இப்போது மீண்டும் தோண்ட ஆரம்பித்து விட்டார்கள்.. அது என்னவென்றால் நடிகர் விஜய் – நடிகை திரிஷா இடையேயான உறவு குறித்து பல வதந்திகள் சினிமா வட்டாரத்தில் பரவி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி நடிகை கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டில் திருமணம் நடைபெற்றது.

இதற்காக நடிகர் விஜய், திரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடிகர் விஜய் மற்றும் திரிஷா இருவரும் தனி சார்ட்டர்டு விமானத்தில் சென்னையில் இருந்து கோவாவுக்கு ஒன்றாக சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது அவர்கள் எடுத்த புகைப்படங்கள் என்று கூறி புகைப்படங்களும் இணையத்தில் பரவியதோடு, அவர்கள் விமான டிக்கெட்டின் பேசஞ்சார் லிஸ்ட் இணையத்தில் பரவியது.

அப்போது அந்த பேசஞ்ச்ர் லிஸ்ட் இனையத்தில் பரவி வைரலானதை தொடர்ந்து, தற்போது விஜய், திரிஷா பெயர்களில் அதே பேசஞ்சர் லிஸ்ட் வெளியாகியுள்ளது.
அதுவும் 12.12.2025 என்ற தினத்தை குறிப்பிட்டுள்ளது அந்த பேசஞ்சர் லிஸ்ட். 2024 என்பதை எடிட் செய்து 2025-ஆக மாற்றி சிலர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வதந்திகளை உருவாக்கி வருகிறார்கள் என்று விஜய் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். விஜயின் வளர்ச்சியை தாங்க முடியாமல் இது அனைத்தும் எதிர்க்கட்சிகள் செய்யக்கூடிய சதி என்றும் அவருடைய தொண்டர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.