‘சிறகடிக்க ஆசை’ சீரியல் நடிகை தற்கொலை செய்துகொண்ட சம்பவம்.!

சிறகடிக்க ஆசை

சமீப காலங்களில் சினிமா மற்றும் சின்னத்திரையில் நடிக்கின்ற நடிகர்கள் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கிறார்கள்.. வாழ்க்கையில் எவ்வளவோ இக்கட்டான சூழ்நிலையில் பெரிய பிரச்சனைகள் அனைத்தையும் சந்தித்தவர்கள் ஆனால் ஏதோ ஒரு நொடியில் அவசரப்பட்டு ஒரு விபரீதமான முடிவை எடுத்து விடுகிறார்கள் அந்த முடிவை எடுத்த அந்த ஒரு கணத்தில் அவர்கள் இறந்து விடுகிறார்கள் ஆனால் அவர்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு நாளும் அவர்களை நினைத்து நினைத்து இறந்து கொண்டே இருப்பார்கள்.

ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இப்போது வரை இந்த சோகம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது.. சினிமா என்பது ஒரு மிகப்பெரிய கடல் போன்றது இந்த கடலில் மூழ்கி மூச்சடக்கி முத்து எடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு கலைஞர்களும் நாளுக்கு நாள் போராடிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.. சினிமா சீரியல் மீது இருக்கும் அளவு கடந்த காதலால் ஒரு கட்டத்தில் தன் குடும்பம் என அனைத்தையும் மறந்து இது தான் தன்னுடைய வாழ்க்கை என்ற ஒரு மாயைக்குள்ளே அவர்கள் விழுந்து விடுகிறார்கள்.. கற்பனை உலகத்தில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கின்ற அவர்களால் எதார்த்தமான வாழ்க்கையில் அவர்கள் அவர்களாக இருக்க முயற்சி செய்தாலும் சூழ்நிலைகள் அப்படி அமைவதில்லை..

இதற்கு பல நடிகர் நடிகைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.. உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் தமிழ் சினிமாவில் நடிகையர் திலகம் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட சாவித்திரி ஒரு காலகட்டத்திற்கு பிறகு மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகி குடிக்கு அடிமையாகி ஒரு அனாதை போல் இறந்து கிடந்தார் என்பதை நாம் அனைவரும் அறிந்தது.. அதேபோன்று காதலர் தின படத்தில் நடித்த ஆனால் அழகான குடும்பம் இருந்தும் திறமை இருந்தும் தவிர்க்க முடியாத மன உளைச்சல் காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். குணால்க்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்த நடிகை சிம்ரனின் தங்கை மோனலும் மிகப்பெரிய மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார்.. இப்படி சொல்லிக் கொண்டே போனால் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை எண்ணற்றவை.. விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டு இறந்த சம்பவம் ஒட்டுமொத்த சின்னத்திரை உலகத்தையும் மிகப்பெரிய அதிர்ச்சிக்கும் சோகத்திற்கும் ஆளாக்கியது. அதற்குப் பின் இப்போது அதே விஜய் டிவியில் மிகவும் ஹிட்டாகி ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை அதில் நடித்துக் கொண்டிருந்த ஒரு நடிகை இப்போது தவிர்க்க முடியாத மன உளைச்சலில் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மீண்டும் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சலசலப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது…


சிறகடிக்க ஆசை சீரியலில் அருணின் அம்மாவாகவும் சீத்தாவின் மாமியாராகவும் நடித்து வந்தவர் தான் ராஜலட்சுமி இவர் இதற்கு முன்பு பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் சமையல் கலைஞர்களில் ஒருவராக நடித்து வந்தவர்.
சிறகடிக்க ஆசை சீரியலில் சில மாதங்களுக்கு முன்பு இவரின் காட்சிகள் இருந்தது ஆனால் தற்பொழுது இவரின் காட்சிகள் கிடையாது இந்த நிலையில் நடிகை ராஜலட்சுமி வீட்டில் தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டார். சீரியல் நடிகையின் மறைவு குறித்து அவருடன் நடித்த சக நடிகைகள் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கம்பம் மீனா தன்னுடைய இன்ஸ்டால் ராஜி குறித்து வருத்தமான பதிவை வெளியிட்டுள்ளார். அவர் அதில் கூறுகையில் உங்கள் மகளுக்கு பெரியவளான நிகழ்ச்சி உள்ளது பத்திரிக்கை வைக்க வருகிறேன் எனக் சொன்னியே  அதற்குள் உயிரை விட்டுட்டாயே என மிகவும் சோகமான பதிவை வெளியிட்டுள்ளார்.


ஏன் ராஜி இப்படி பண்ணின…
என்ன பிரச்சனை இருந்தாலும் தற்கொலை தான் தீர்வா…?
நீ எவ்ளோ தைரியமான பொண்ணு,
எவ்லோ போல்டா எல்லாத்தையும் பேசுவ…
நான் ஒரு ஆளு 10 ஆம்பளைக்கு சமம்னு சொல்லுவியே…
எம்பொண்ணுக்கு சடங்கு பங்சன்க்கா இன்விடேசன் குடுக்கனும் வர்றேங்கானு சொன்னியே…
இப்ப உன் பொண்ண பத்திகூட யோசிக்காம இந்த முடிவு எடுத்திட்டியே ராஜி….மனசு வலிக்குது…
என்னதான் தைரியமானவங்களா இருந்தாலும் மனசு வெறுத்துட்டா அவ்லோ தானா…..
வாழவும் விடாத சாகவும் விடாத இந்த கேடு கெட்ட சமூகத்துல வாழவே கூடாதுனு முடிவு பண்ணிட்டியா…?
ஒருத்தர மிதிச்சு ஒருத்தர கெடுத்து தான் முன்னேற முடியும்ங்கிற சமூகம் வேணாம்னு இந்த முடிவு எடுத்துட்டியா…?
எப்படி இருந்தாலும் நீ தைரியமானவள் தான்…
ஏன்னா..
தன் உயிரை மாய்ச்சுகிறதுக்கும் தைரியம் வேணும்ல…
சரி ராஜி அங்கபோயாவது நிம்மதியா இரு…
உன் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கிறேன்…


என்று அவர் பதிவிட்டுள்ளார். இந்த உருக்கமான பதிவை பெரும்பாலான ரசிகர்கள் அவசரப்பட்டு இப்படி ஒரு முடிவு எடுத்துட்டியே ராஜி என்று அவர்களுடைய ஆதங்கத்தையும், தற்கொலை செய்து கொண்ட நடிகையின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.