டேய் நாஞ்சிலு சம்பத் உன் தலைவனுங்க உன் பொண்டாட்டிய என்ன பண்ணுனாங்கன்னு சொல்லவா?? நேருக்கு நேரா வாடா தற்குறி

தமிழ்நாட்டில் எத்தனையோ கட்சிகள் தொடர்ந்து வந்தாலும் நாம் தமிழர் கட்சிக்கென்று ஒரு தனி மரியாதையும் அந்தஸ்தும் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தான் இருக்கிறது அதற்குக் காரணம் தேர்தல் வரும் போதெல்லாம் பல கட்சிகள் கூட்டணி வைத்துக் கொள்ளும் ஆனால் இதுவரை யாருடனும் எந்த கூட்டணியும் இல்லாமல் தனித்து நின்றபடியே தேர்தலை சந்தித்து வருகிறது நாம் தமிழர் கட்சி.. நாம் தமிழர் கட்சியின் மிகப்பெரிய சொத்தே சீமானின் பேச்சும் அந்தக் கட்சியில் இருக்கக்கூடிய தொண்டர்களின் பேச்சு மட்டும் தான்..

சீமானுக்கு அடுத்தபடியாக அந்த கட்சியில் பரவலாக அறியப்பட்டவர் சாட்டை துரை முருகன்..இவர் தனக்கென்று ஒரு யூடியுப் சேனலும் நடத்தி வருகின்றார்..தொடர்ந்து அதில் தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார் அந்த விதத்தில் இப்போது அவர் பேசிய ஒரு பதிவு தான் இணையதளங்களில் காட்டுத் தீ போல வைரல் ஆகி வருகின்றது..


கடந்த சில நாட்களாக தவெகவின் நாஞ்சில் சம்பத், நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் இடையேயான வார்த்தை மோதல் காது கொடுத்து கேட்க முடியாத அளவிற்கு சென்றுள்ளதால் பொதுமக்கள் தலையில் அடித்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக வெற்றி கழகம் தொடங்கப்பட்ட நாள் முதல் அக்கட்சியின் தலைவர் விஜய்யையும், அவரது கட்சியையும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து விமர்சித்து வந்தார். ஆனால் சீமானின் விமர்சனத்திற்கு துளி அளவும் செவி சாய்க்காத விஜய் தனது எதிரியை மட்டும் தான் விமர்சிப்பேன் என்ற ஒரே டிராக்கில் பயணித்து வருகிறார். இதனால் தற்போது சீமான் மட்டுமல்லாமல் நாதகவின் இரண்டாம் கட்ட தலைவர்களும் விஜய், தவெக தொண்டர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
குறிப்பாக அண்மையில் தவெகவில் இணைந்த நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் நாதகவின் சாட்டை துரைமுருகனால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். தொடக்கத்தில் நாகரிகமான முறையில் தொடங்கிய விவாதம் தற்போது காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு தரம் தாழ்ந்து சென்றுள்ளது.

தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த நாஞ்சில் சம்பத், “சாட்டை துரைமுருகன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் காளியம்மாளையே தூக்கி எறிந்துவிட்டனர். காளியம்மாளை காட்டிலும் சாட்டை ஒன்றும் பெரிய ஆள் இல்லை. ஆகவே சாட்டை துரைமுருகன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதே போல் உங்கள் தலைவர் உங்கள் வீட்டுக்குள்ளும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

நாஞ்சில் சம்பத்தின் பேச்சால் உச்சக்கட்ட கோபமடைந்த சாட்டை துரைமுருகன், இவரை விமர்சித்தே 24 நிமிட வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், “விஜய்யை தற்குறி என சொல்பவர்கள் தான் தற்குறி என்று சொல்கிறார். ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் விஜய் ஒரு தற்குறி, அவன் ஒரு தவக்களை என்று பேசியிருந்தார். மேலும் கரூரில் 41 பேர் இறந்தது குறித்து கேள்வி எழுப்பினால், விஜய் ஒரு ஆட்கொண்ட தலைவன் என்பதால் அவரை பார்ப்பதற்காக தொண்டர்கள் வருகிறார்கள்.


நானும் ஒரு காலத்தில் கலைஞரின் கார் பின் ஓடியுள்ளேன் என்று சொல்கிறார். அப்படியென்றால் அன்று கலைஞர் கார் பின்னால் ஓடியவர் இன்று விஜய்யின் பேருந்து பின்னால் ஓடுகிறார். அப்படியென்றால் நாஞ்சில் சம்பத்தும் ஒரு தற்குறி தான். நாஞ்சில் சம்பத்துக்க மரியாதை கொடுத்தால் அது மரியாதைக்கே அவமரியாதையாகிவிடும்
மதிமுக, அதிமுக, சசிகலா, டிடிவி தினகரன், திமுக என பல கட்சிகளுக்கு மாறி வாயை வாடகைக்கு விட்டு பிழைத்தவர் நாஞ்சில் சம்பத் என கடுமையான வார்த்தைகளால் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர்..

அதோடு மட்டுமல்லாமல் கடந்த 10 நாட்களுக்கு முன்னால் தான் திமுகவில் இருக்கக்கூடிய உதயநிதிக்கு அவ்வளவு தூரம் சொம்பு அடித்து திராவிடத்தின் எதிர்காலம் என்றெல்லாம் நாஞ்சில் சம்பத் பேசினார் இப்போது அதே வாய்தான் இங்கு இருக்கக்கூடிய பல லட்சம் இளைஞர்களின் தலைவன் விஜய் என்று இப்போது இவருக்கு சொம்படித்துக் கொண்டிருக்கிறார். நீயெல்லாம் பிறந்ததே ஒரு சாபக்கேடு என்று சாட்டை துரைமுருகன் நாஞ்சில் சம்பத்தை கிழி கிழியென்று கிழித்து தொங்கவிட்டு இருக்கிறார்.. இந்த வீடியோ இப்போது இணையத்தில் பல லட்சம் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகிக் கொண்டிருக்கிறது