மரணத்தின் விளிம்பில் பிரபல சீரியல் நடிகை கவலைக்கிடம். பேரதிர்ச்சியில் ரசிகர்கள்.!
பொதுவாகவே நாம் அனைவருக்கும் சினிமா, சீரியல் நடிகர்கள், நடிகைகள் என்றாலே அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், வசதியாகவும் இருக்கிறார்கள் அவர்கள் யாருக்கும் எந்தவித கவலையும் இல்லை என்ற எண்ணம் உண்டு… ஆனால் யதார்த்தமான உண்மை என்னவென்றால் பெரிய ஹீரோ, ஹீரோயின் நடிகர் நடிகைகளை விட இரண்டாம் தர நடிகர் நடிகைகள் பெரும்பாலும் மன உளைச்சலில் மிக அதிகமாக வாழ்கிறார்கள்.. ஒரு கட்டத்தில் சராசரியாக நாம் வாழ்கின்ற வாழ்க்கையை கூட அவர்கள் யாரும் வாழ்வதில்லை.. சினிமா அல்லது சீரியல் பிரபலமாக இருந்தால் பந்தாவாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் நான்கு பேர் மதித்து நம்மை அழைப்பார்கள் வாய்ப்பு கொடுப்பார்கள் என்ற கற்பனையில் கடன் வாங்கி ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபட ஆரம்பிக்கிறார்கள் ஆனால் போதிய வாய்ப்பு அவர்களுக்கு இல்லாத போது அந்த கடனில் மூழ்கி பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் ஒரு சிலர் அந்த நடிப்பில் இருந்து விலகி சில தவறான தொழிலிலும் ஈடுபடுகிறார்கள்.. கலையை நேசிக்கும் சில நல்ல நடிகர் நடிகைகளும் உண்டு அவர்களை மக்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். ஆனால் என்னதான் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினாலும் அது அவர்களுக்கு மார்க்கெட் இருக்கும் வரைக்கும் மட்டும்தான்..
பிரபல தெலுங்கு சீரியல் நடிகை வாஹினி, தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி அவரது ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 1978ம் ஆண்டு பிறந்த நடிகை வாஹினி, பல தமிழ் மற்றும் தெலுங்குப் படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் துணை வேடங்களில் நடித்து, தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார். ஒரு காலகட்டத்தில் தெலுங்கு சீரியல் ரசிகர்களிடையே இவருக்குத் தனி இடம் இருந்தது.
கடந்த சில மாதங்களாக நடிகை வாஹினி மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சிகிச்சை பலனளிக்காமல், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.
இந்நிலையில், உடல்நிலை மேலும் மோசமானதால், நடிகை வாஹினி தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் செய்தி திரையுலகில் உள்ள பலருக்கும் கவலையளித்துள்ளது.. நடிகை வாஹினி இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீண்டு நல்லபடியாக உடல்நிலை சரியாகி வர வேண்டும் என்று நாம் அனைவரும் இறைவனை வேண்டிக் கொள்வோம்.
