உண்மையிலே ரஜினிசார் சொக்க தங்கம்.! வாரி வாரி கொடுக்கும் கர்ணன், ரமேஷ் கண்ணா உடைத்த உண்மை.!

சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையில் உண்மையிலேயே கஷ்டப்படுபவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்கும் வண்ணம் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று அவருடன் பட பாடல்கள் இணைந்து ஒன்றாக நடித்த நடிகர் மற்றும் இயக்குனர் ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்கள் மற்றும் படக்குழுவினரிடம் காட்டும் அன்பு, மரியாதை எப்போதும் கவனம் ஈர்க்கும் வகையில் உள்ளது. குறிப்பாக, சமீபத்தில் வெளியான காந்தாரா படத்தின் வெற்றியையொட்டி, இயக்குநர் ரிஷப் ஷெட்டிக்கு தங்கச் சங்கிலி மற்றும் பதக்கம் வழங்கிய நிகழ்வு ரசிகர்களையும் திரையுலகத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதேபோல், அண்ணாத்த படத்தின் வெற்றியையொட்டி, இயக்குநர் சிவா மற்றும் படக்குழுவின் மற்ற உறுப்பினர்களுக்கும், இசையமைப்பாளர் இமான் உட்பட பல ஊழியர்களுக்கும் ரஜினிகாந்த் தங்கச் சங்கிலிகளை வழங்கினார். இசையமைப்பாளர் மற்றும் படக்குழுவினர் சமூக வலைத்தளங்களில் இதனை பகிர்ந்து, ரஜினிகாந்தின் அன்பு மற்றும் மனப்பாசத்தை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினர்.
மேலும், ரஜினிகாந்தின் மனப்பாசத்தை உணர்த்தும் இன்னொரு குறிப்பிடத்தக்க சம்பவமாக, முத்து படத்தின் ஷூட்டிங்கின் போது தயாரிப்பாளர் கலாநிதி மாறன் 300 பேருக்கு தங்க நாணயங்களை வழங்கிய நிகழ்வு குறிப்பிடத்தக்கது. நடிகர் ரமேஷ் கண்ணா தனது அனுபவத்தை பகிர்ந்து, “முத்து படத்தின் ஷூட்டிங்கின் போது ஒரு சாதாரண பேச்சுவார்த்தையில் நான் அனைவருக்கும் செயின் போட்டால் நன்றாக இருக்கும் என்று கூறினேன். ஆனால் தலைவர் அதைக் கவனித்து, மொத்த குழுவிற்கும் ‘முத்து’ என எழுதப்பட்ட ஒரு பவுன் செயின் பரிசாக வழங்கினார்” என்று கூறினார். இது ரஜினிகாந்தின் தனிப்பட்ட அன்பையும், படக்குழுவினருக்கும் ஊழியர்களுக்கும் அவர் காட்டும் மரியாதையையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
இத்தகைய நிகழ்வுகள், ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கும் கோலிவுட் தொழிலாளர்களுக்கும் எப்போதும் ஊக்கமும், முன்னோக்கும் வழிகாட்டுதலாக இருக்கிறது. அவர் தனது படக்குழுவினரின் பெருமை மற்றும் மகிழ்ச்சியை முன்னிலைப்படுத்துவதில் தொடர்ந்து முன் நிற்கிறார். சூப்பர்ஸ்டார் யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்ற பாடல் அவருக்கென்றே எழுதப்பட்டது.. அவர் ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை எதையெல்லாம் கடந்து வந்திருக்கிறார் என்பதை பற்றி கீழே சில சுவாரசியமான சம்பவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.. அதை சற்று விரிவாக பார்க்கலாம்
ஆரம்பகாலத்தில் அவர் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறார்..
திரைப்பட வாய்ப்புகளுக்காக தனது 26-ஆவது வயதில் ரஜினிகாந்த் சென்னை வந்தார்.
ரஜினியின் இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். 22 ஆண்டுகளுக்கு முன், சென்னையில் அவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு வீடு திரும்பிய மூன்று ரசிகர்கள் விபத்தில் உயிரிழந்தனர். அதிலிருந்து ரஜினி தனது பிறந்தநாளை சென்னையில் கொண்டாடுவதில்லை. ஐந்தாவது வயதில் தனது தாயை இழந்த ரஜினி, ஆரம்ப காலத்தில், கர்நாடகாவில் பெங்களூரு போக்குவரத்து கழகத்தில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். அவரது தாய் மொழி மராத்தியாக இருந்தாலும், இதுவரை ஒரு மராத்தி படத்திலும் ரஜினிகாந்த் நடித்ததில்லை. திரைத்துறையில் நுழைவதற்கு முன், கன்னடத்தில் பல்வேறு நாடக நிகழ்ச்சிகளில் ரஜினி நடித்துள்ளார்.
போதிய பண வசதி இல்லாததால் நடிப்பு பயில முடியாமல் இருந்த ரஜினியை, மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிட்யூடில் சேர்த்து உதவி செய்தவர் அவரது நெருங்கிய நண்பர் பஹதூர். நாடக நிகழ்ச்சி ஒன்றில் முதல்முறையாக ரஜினியை பார்த்த இயக்குனர் கே.பாலச்சந்தர் “அபூர்வ ராகங்கள்”(1975) படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் அவரை நடிக்க வைத்தார். அபூர்வ ராகங்கள் படத்திற்கான நடிகர்கள் தேர்வில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், சிவாஜி கணேசனை போல நடித்து காண்பித்தார். அதனை பார்த்த கே.பாலச்சந்தர் ரஜினியை தமிழ் கற்றுக் கொள்ளும்படி கூறினார்.
கே.பாலச்சந்தர்தான் தன்னுடைய வழிகாட்டி என அடிக்கடி கூறுவார் ரஜினி. எனினும், அவரது பாணி மற்றும் சினிமா வாழ்க்கையை மாற்றியமைத்தது இயக்குனர் எஸ்.பி. முத்துராமன். “நிம்மதியாக ஒரு கண்டக்டராக இருந்த சிவாஜி ராவை, நீங்கதானே ரஜினிகாந்தாக ஆக்கினீங்க? திடீர்னு வந்த புகழ் போதையைத் தாங்கிக்கக் கூடிய சக்தி எனக்கில்லை சார்” என்று தேம்பித் தேம்பி ஒரு குழந்தையைபோல் ரஜினி அழுததாக ஒருமுறை கே.பி குறிப்பிட்டிருந்தார். எஸ்.பி. முத்துராமனின் இயக்கத்தில் 25 படங்களில் நடித்துள்ளார் ரஜினி.


“ரஜினி வைரம் என்றால், நானும் கே.பியும் அவனை மிளிரச் செய்தோம். கே.பி வைரத்தை கண்டுபிடித்தார். நான் அதனை மெருகேற்றினேன்”, என்று கூறியிருக்கிறார் எஸ்.பி.முத்துராமன்.
கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ஏழு படங்கள் ரஜினி நடித்துள்ளார்.
கே.பாலச்சந்தர் எனக்கு வழிகாட்டி மட்டுமல்ல. அவர் என் தந்தை போல” என ஒருமுறை ரஜினி கூறியிருந்தார். என்னை திருத்தவும் கண்டிக்கவும் உரிமையுள்ள ஒரே இயக்குநர் நீங்கதான்” என்றும் கே.பியிடம் ரஜினி கூறினார்.
அபூர்வ ராகங்கள் வெளியான அடுத்த ஆண்டே, கன்னடத்தில் ‘கத சங்கமா’ என்ற படத்தில் அவர் நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, வங்காளம் மற்றும் ஆங்கில மொழிப் படங்களில் ரஜினி நடித்துள்ளார். ரஜினி ஆங்கில மொழியில் நடித்த முதல் மற்றும் ஒரே படம் “ப்ளட்ஸ்டோன்” 1988ஆம் ஆண்டு வெளியானது.
அவர்கள்”, “மூன்று முடிச்சு”, “16 வயதினிலே” படங்களில் தொடர்ந்து வில்லனாக நடித்த ரஜினி, அப்போதே மக்கள் மனதில் இடம்பிடிக்கத் தொடங்கினார். .கமலும் ரஜினியும் ஒன்றாக இணைந்து 12 படங்களில் நடித்துள்ளனர். அதில் 9 தமிழ் படங்கள், 2 தெலுங்கு மற்றும் ஒரு இந்தி மொழிப்படம் ஆகும்.
இருவரும் இணைந்து நடித்த கடைசி படம் “நினைத்தாலே இனிக்கும்” முதன் முதலில் முழு கதாநாயகனாக ரஜினிகாந்த் அறிமுகமாகிய திரைப்படம் பாஸ்கர் இயக்கிய “பைரவி”பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்த பல கதாப்பாத்திரங்களை தமிழில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
ஸ்டைல், நடை, உடை பாவனைகளிலேயே தீவிர ரசிகர் கூட்டத்தைப் ரஜினி பெற்றார்.
“ஆறிலிருந்து அறுபது வரை”, “ஜானி” போன்ற திரைப்படங்கள் ரஜினியின் நடிப்புத் திறனை முழுமையாக வெளிப்படுத்திய திரைப்படங்கள் என அப்போது கருதப்பட்டது.
நடிகைகள் ஸ்ரீபிரியா மற்றும் ஸ்ரீதேவியுடன் இணைந்து அதிக படங்கள் நடித்துள்ளார் ரஜினிகாந்த்.


கே.பாலச்சந்தரின் தயாரிப்பு நிறுவனம் முதன் முதலாக தயாரித்து, எஸ்.பி. முத்துராமன் இயக்கிய “நெற்றிக்கண்” திரைப்படம், ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
இவர் முதன்முதலாக மூன்று வேடங்களில் நடித்த திரைப்படம் “மூன்று முகம். நல்லவனுக்கு நல்லவன்” திரைப்படத்திற்கு முதன் முதலில் ‘ஃபிலிம்ஃபேர்’ விருது பெற்றார் ரஜினி. ரஜினி திரைக்கதை எழுதி, நடித்த “வள்ளி” திரைப்படம் 1993ல் வெளியானது. 90களில் வெளிவந்த தளபதி, மன்னன், அண்ணாமலை, உழைப்பாளி, வீரா, பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா போன்ற படங்கள் வணிகரீதியாக மிகப்பெரிய வெற்றிப் படங்களாக கருதப்பட்டது.
மன்னன்” படத்தில் ‘அடிக்குது குளிரு’ என்ற பாடல்தான் ரஜினி சினிமாவில் பாடிய முதல் பாடல். ”ரஜினி ஸ்டைலை யாராலும் செய்ய முடியாது அது மிகவும் கடினம்” என்று இந்தி நடிகர் ஷாருக்கான் ஒருமுறை கூறியிருக்கிறார். நா ஒரு தடவ சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி”, “பேர கேட்டாலே சும்மா அதிருதுல” போன்ற ரஜினியின் பன்ச் டயலாக்குகள் தமிழகத்தின் பெரும்பாலான வீடுகளில் இன்றும் எதிரொலிக்கின்றன. 1992ல் வெளிவந்த அண்ணாமலை திரைப்படத்தில் “என் பாட்டுக்கு என் வேலைய செஞ்சிக்கிட்டு ஒரு வழில நான் போய்க்கிட்டிருக்கேன். என்னை வம்புக்கிழுக்காதீங்க. வம்புக்கிழுத்தா நான் சொன்னதையும் செய்வேன்.. சொல்லாததையும் செய்வேன்” என்ற வசனம் இடம்பெற்றது. இது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அன்றிலிருந்து இன்றுவரை புகழும்,சர்ச்சையும் ரெட்டை குழந்தை போல அவரை பின்தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது