சற்றுமுன் கோயமுத்தூரில் நடிகை சமந்தா மீண்டும் திடீர் திருமணம்.!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை தான் நடிகை சமந்தா
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்த சமந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கை ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக ஆரம்பித்து பின்னாளில் மிகவும் கவலைக்கிடமான முறையில் முடிந்தது..ஆசை ஆசையாக காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவருமே பரஸ்பரமாக விவாகரத்து செய்து கொண்டார்கள். அதன்பின் நாகச்செய்தன்யா நடிகை சோபிதாவை திருமணம் செய்து கொண்டார்.. தற்போது நடிகை சமந்தா ருத் பிரபுவோடு தனது தனிப்பட்ட வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். பல மாதங்களாக நிலவி வந்த டேட்டிங் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சமந்தா மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ராஜ் நிடிமோரு ஆகியோர் டிசம்பர் 1 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டு, ஒரு புதிய பயணத்தை ஒன்றாகத் தொடங்கியுள்ளனர்.
தற்போது, நடிகை சமந்தா புதிய மாமனார், மாமியார் மற்றும் ராஜ் ஆகியோருடன் காதுக்கு காது சிரித்தபடி இருக்கும் ஒரு புதிய புகைப்படம் ஆன்லைனில் வெளியாகி வைரலாகி உள்ளது. இந்த புகைப்படத்தை ராஜ் நிடிமோரு சகோதரி ஷீதல் நிடிமோரு இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்தப் படத்தில், கைகளில் மெஹந்தியுடன் பச்சை நிற உடையில் இருக்கும் சமந்தா, ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருடன் போஸ் கொடுத்துள்ளார்கள்.. மேலும் அந்த புகைப்படத்திற்கு கீழே
“பகிர்ந்து கொள்ளும் காதல் பெருகும்,” என்று ஷீதல் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த ஷீதல், “இணக்கம் தான் உண்மையான ஆசீர்வாதம்” என்று குறிப்பிட்டுள்ளார். திருமணத்திற்குப் பிறகு, ஷீதல் திருமண விழாவில் எடுக்கப்பட்ட மற்றொரு குடும்பப் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, சமந்தா மற்றும் ராஜ்ஜுக்காக அவர்கள் அனைவரும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதைப் பற்றி குறிப்பிட்டிருந்தார்.
கோவை சந்திரகுண்டில் சிவனை பிரார்த்திக்கும்போது, நனைந்து, நடுங்கி, பிரதோஷ வேளையில், கண்ணீர் நிறைந்த இதயத்துடன் இருந்தபோது என்னை சிவன் கட்டிப்பிடிப்பது போல் உணர்ந்தேன். இது வேதனையின் கண்ணீர் அல்ல… ஆனால் நன்றி உணர்ச்சியின் கண்ணீர்.” என்று பதிவிட்டிருந்தார். மேலும், “இந்த தருணத்தில் நான் உணரும் அமைதி, எங்கள் குடும்பத்தைச் சுற்றி நிலவும் தெளிவு மற்றும் ராஜ் மற்றும் சமந்தாவின் பயணத்தில் உள்ள ஆழமான ‘மென்மையான இணக்கத்திற்காக’ நன்றி. அவர்கள் அமைதியான கண்ணியம், நேர்மை மற்றும் இரண்டு இதயங்கள் ஒரே பாதையை நோக்கிய நோக்கத்துடன் தேர்ந்தெடுக்கும்போது மட்டுமே வரும் ஒரு நிலைத்தன்மையுடன் முன்னோக்கி செல்வது குறித்து ஒரு குடும்பமாக நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். ஒரு குடும்பமாக, நாங்கள் அவர்களுக்குப் பின்னால் ஒன்றாக, முழுமையாக, மகிழ்ச்சியுடன், தயக்கமின்றி நின்று, அவர்களுக்கு ஆசீர்வதித்து, ஒவ்வொரு வழியிலும் ஆதரவளிக்கிறோம்,” என்று நெகிழ்ச்சியுடன் எழுதியுள்ளார்.
சமந்தாவைப் போலவே, ராஜ் நிடிமோருவுக்கும் இது 2-வது திருமணம். சமந்தா தனது முன்னாள் கணவரும் நடிகருமான நாக சைதன்யாவிடம் இருந்து 2021 இல் பிரிந்தார். ராஜ், முன்பு ஷியாமாலி தே என்பவரை மணந்தார். என்டிடிவி தகவலின்படி, அவர்கள் 2015 இல் திருமணம் செய்துகொண்டனர், ஆனால் 2022 இல் விவாகரத்து செய்தனர். இதைப் பார்த்து ரசிகர்கள் எது எப்படியோ நம்ம தலைவி சமந்தாவோட வாழ்க்கை இதுக்கப்புறமாவது நல்லா இருக்கட்டும் என்று ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை சொல்லி வருகின்றார்கள்.
