சமந்தாவின் 2வது கல்யாணம் முடிந்த கையோடு முதல் கணவன் நாகசைத்தன்யாவின் மனைவி சோபிதா சொன்ன குட் நியூஸ்
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ரசிகர்களால் கனவு கன்னி என்று அழைக்கப்பட்டவர் தான் நடிகை சமந்தா.. பொதுவாகவே பெரும்பாலான கதாநாயகிகள் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்து நடித்த பிரபலம் ஆகி விடுவார்கள் ஆனால் சமந்தா சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த தமிழ் பெண்.. சமந்தாவின் பூர்வீகம் சென்னை ஆக இருந்தாலும் தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து இப்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்படக் கூடியவர்..
தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்..அவர்களுடைய வாழ்க்கையும் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது அப்போது அந்த நேரத்தில் சமந்தாவும் நாக சைதன்யாவும் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்கின்ற ஒரு சர்ச்சை கிளம்பியது அதற்கு நாகார்ஜுனாவின் குடும்பம் வாய் திறந்து பதில் சொல்லாமல் மௌனம் காத்தது. ஒரு பிரபலமான வெப்சீரிஷில் சமந்தா நிர்வாணமாக நடித்தது தங்கள் குடும்பத்தின் கவுரவத்தை சீர்குலைத்து விட்டதாக நாக சைதன்யா சமந்தாவின் மீது குற்றச்சாட்டு சொல்ல இது என்னுடைய சுதந்திரம் இதில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று சமந்தா சொல்ல பின் அவர்கள் இருவருக்கும் உண்மையிலேயே பிரச்சனை இருக்கிறது என்று வெளி உலகத்திற்கு தெரிய வர அடுத்த ஒரு சில மாதங்களில் இருவரும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்கிறார்கள்.. பெரும் தொகையை கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் சமந்தாவிற்கு ஜீவனாம்சம் கொடுக்க நாகார்ஜுனாவின் குடும்பம் முன் வந்தாலும் சமந்தா அதை வேண்டாம் என்று மறுத்து விட்டார்..அதன்பின் நாகசை தனியாக நடிகை சோபிதாவை திருமணம் செய்து கொண்டார் ..
இது ஒரு பக்கம் இருக்க கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் சமந்தாவின் இரண்டாவது திருமணம் குறித்து செய்திதான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
இது ஒரு பக்கம் இருக்க, சமந்தா அவர்கள் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து இருந்தார். பின் திருமணம் ஆகி நான்கு ஆண்டுகளில் இருவரும் பிரிந்து விட்டார்கள். விவாகரத்திற்கு பின் சமந்தா தன் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும், சில மாதங்களாக சமந்தா இயக்குனர் ராஜ் நிடிமோருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பலரும் இருவரும் காதலிப்பதாக சொல்லி வந்தார்கள். ஆனால், இதற்கு இருவருமே மறுப்பு தெரிவிக்கவில்லை. ஒத்துக்கொள்ளவும் இல்லை.
இதனால இவர்கள் இருவருடைய உறவு பற்றி சோசியல் மீடியாவில் காட்டு தீயை போல ஏதாவது ஒரு செய்தி வந்து கொண்டிருக்கிறது. மேலும், சமந்தாவுக்கும் ராஜ் நிடிமோருவுக்கும் கோவையில் உள்ள ஈசா யோகா மையத்தில் தான் திருமணம் நடந்தது. இது இவர்கள் இருவருக்கும் இரண்டாவது திருமணம். இவர்களுடைய திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்தார்கள். இதை பார்த்து பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இப்படி இருக்கும் நிலையில் நாக சைதன்யா- சோபிதா சொல்லியிருக்கும் குட் நியூஸ் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, விவாகரத்திற்கு பிறகு நாக சைதன்யா அவர்கள் நடிகை சோபிதாவை காதலித்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர்களின் நிச்சயதார்த்தம் எளிமையாக நாக சைதன்யாவின் வீட்டில் நடந்தது. அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாகர்ஜுனா குடும்பத்துக்கு சொந்தமாக ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நாக சைதன்யா- சோபிதா திருமணம் நடைபெற்றது. இவர்களில் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே கலந்து இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவர்களுக்கு திருமணம் ஆகி ஓர் ஆண்டுகள் நிறைவடைந்தது அடுத்து சோபிதா அவர்கள் சிறப்பு பதிவு ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். திருமணத்தின் போது எடுத்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்து பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ரசிகர்கள் எப்போது நாகச்சைத்தன்யா சமந்தா இருவரும் வெவ்வேறு வாழ்க்கையை அமைத்துக் கொண்டாலும் இப்போது வரை அவர்கள் இருவருக்கும் அந்த முதல் காதல் ஏதோ ஒரு ஓரத்தில் இருந்து கொண்டே தான் இருக்கிறது என்று தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது….
