பொசுக்குன்னு மேடையிலயே காலில் விழுந்த அர்ச்சனா.! நடிகர் சத்யராஜ் சொன்ன அந்த ஒரு வார்த்தை என்ன தெரியுமா?
ஆரம்பத்தில் வில்லனாக அறிமுகமாகி பின் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சத்யராஜ்… வயது ஆக ஆக எல்லோருக்கும் மார்க்கெட் சரிய தொடங்கும் ஆனால் ஒரு சில நடிகருக்கு மட்டும் தான் தொடர்ந்து மார்க்கெட் வயதானாலும் உயர்ந்து கொண்டே இருக்கும்.. அந்த விதத்தில் பாகுபலியில் சத்யராஜ் நடித்த கட்டப்பா கதாபாத்திரம் உலகம் முழுக்க பேசப்பட்டது.. சினிமாவில் நடிக்கக்கூடிய ஒவ்வொரு நடிகர் நடிகைகளுக்கும் அவர்கள் நேசிக்கும் தலைவனாக ஒரு சில நடிகர்கள் இருப்பார்கள்.. உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் பெரும்பாலான இளைஞர்கள் சிம்புவை லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று சொல்லி கொண்டாடுவார்கள் ஆனால் அதே நேரத்தில் சிம்பு நான் தல அஜித்தின் தீவிரமான ரசிகன் என்று அவர் அனைத்து இடங்களிலும் ஓப்பனாக சொல்லி இருக்கின்றார்.
சிம்பு எப்படி அஜித்தை நேசித்தாரோ அதேபோன்று ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய பெரும்பாலான நடிகர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆரை மிக அதிகமாக நேசிக்க ஆரம்பித்தார்கள்.. அவரை வாத்தியார் என்று அனைவரும் செல்லமாக அழைத்தார்கள்.. அந்த விதத்தில் நடிகர் சத்தியராஜ் பெரிதும் நேசிக்கக்கூடிய நடிகராக இருந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.. புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பற்றி சத்யராஜ் பேசிய ஒரு சம்பவம் தான் இப்போது இணையதளத்தில் பெரும் வைரலாகி வருகின்றது..
நளன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி, கீர்த்தி செட்டி, ராஜ்கிரன், நடிப்பில் உருவாகி இருக்கும் வாத்தியார் திரைப்பட பிரமோஷனில் கலந்து கொண்ட சத்யராஜ் சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் சொன்ன சில விஷயங்களை கேட்டு ஆச்சரியமடைந்த விஜே அர்ச்சனா பொசுக்கென்று மேடையில் வைத்து சத்யராஜ் காலில் விழுந்தார் அதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்..
சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற வெற்றிப் படங்களை இயக்கி தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நளன் குமாரசாமி. இவரின் படங்கள் எல்லாமே காமெடி மற்றும் கலகலப்பு நிறைந்ததாக இருக்கும் அவர் தற்போது உருவாக்கி இருக்கும் வா வாத்தியார் திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்
இந்த படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்திருக்கிறார் அவருக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடித்திருக்கிறார் இந்த படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன் அமைத்திருக்கிறார்.. இந்த படத்தின் ஷூட்டிங் பல மாதங்களாக தொடர்ந்து நடந்து வந்த நிலையில் இந்த படம் டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதியே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இப்போது டிசம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது..
இந்த படத்தில் கார்த்தி உடன் ராஜ்கிரண்,சத்யராஜ், மற்றும் கருணாகரன் சில்பா, மஞ்சுநாத், ஆனந்தராஜ், ஜி எம் சுந்தர் ரமேஷ் திலக்கென பெரும் நட்சத்திர பட்டாளமே களம் இறங்கி இருக்கின்றது. இந்த படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியை பட குழு ஏற்பாடு செய்திருந்தது அதில் நடிகர் சத்யராஜ் அவருக்கே உரித்தான பாணியில் சில விஷயங்களை சுவாரசியமாக சொல்லி இருந்தார் அவர் பேசும்போது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவருடைய தீவிரமான ரசிகன் நான் இன்னும் சொல்லப்போனால் நான் வாத்தியாருடைய வெறியன் என்று சொல்லலாம் அந்த அளவுக்கு அவருடைய படத்தை நான் பார்த்து பார்த்து ரசித்ததால்தான் எனக்கு இந்த சினிமாவின் மீது மிகப்பெரிய காதல் வந்தது என்றும் அதே நேரத்தில் அப்போது தனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இருக்கும் பந்தம் மற்றும் எம்ஜிஆரிடம் தான் வாங்கிய கர்லகட்டை பற்றியும் அவர் சுவாரசியமாக சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.
தொடர்ந்து அவர் இதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது அந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர் குரல் ஒன்று ஒலித்தது அதில் கார்த்தி தன்னுடைய ரசிகராக இந்த படத்தில் நடித்திருப்பதாகவும் அவருடைய நடிப்பு எப்படி இருக்கிறது என்றும் அந்த குரல் கேட்டது அதற்கு சத்யராஜ் கார்த்தியை பாராட்டி பேசி இருந்தார் பிறகு எம்ஜிஆர் நடித்த பொங்கலுக்கு வெளியான ஒவ்வொரு திரைப்படங்கள் பெயரையும் வரிசையாக சத்யராஜ் சொல்லிக் கொண்டிருந்ததை பார்த்து அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த வி ஜே அர்ச்சனா அப்படியே ஷாக் ஆகி இன்ப அதிர்ச்சி அடைந்து சத்யராஜ் காலில் நெடுஞ்சான் கிடையாக விழுந்து தெய்வமே உங்க அளவுக்கு எம்ஜிஆர் சார் ரசிகரா யாரும் இருக்க முடியாது என்று பாராட்டினார்.. பின் அர்ச்சனா இவ்வளவு ஞாபகம் வைத்து வேறு யாராலும் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை நீங்கள் உண்மையிலேயே எம்ஜிஆரின் தீவிர ரசிகர் அவரை அனுவனுவாக ரசித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது என பாராட்டி தள்ளினார் அதுபோல இந்த நிகழ்ச்சியில் சத்யராஜ் பேசிக் கொண்டிருக்கும் போது வில்லன் நடிகர் ஆனந்தராஜ் குறிப்பிட்டு சில விஷயங்களை சொல்லி இருந்தார்..
ஆனந்தராஜ், சத்யராஜை பார்த்து தளபதி விஜய் சிவகார்த்திகேயனிடம் எப்படி துப்பாக்கியை கொடுத்து விட்டு போனாரோ அதேபோல் சத்யராஜ் எனக்கு இப்போது கர்லாக்கட்டை தரப்போறார் என்று சொல்ல அதற்கு சத்யராஜ் சிரித்துக்கொண்டிருந்தார் அந்த கர்லா கட்டையை நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன் அது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இடமிருந்து வாங்கியது எம்ஜிஆர் வீட்டிற்கு நான் ஒரு நாள் போயிருந்தேன் அப்போது அவர் உங்களுக்கு என்ன வேணும் நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க என்று கேட்டார் நான் அவரிடம் எதையும் கேட்கக்கூடாது என்ற முடிவோடு மிகத் தெளிவாக இருந்தேன்.
அதனால் அவரிடம் மிகப் பணிவாக நான் வேண்டாம் என்று சொன்னேன் ஆனால் அவர் தொடர்ந்து வற்புறுத்தி இல்லை நீங்க ஏதாவது கேளுங்க நான் உங்களுக்கு கொடுத்தே ஆகணும் என்று சொல்ல அப்போது சத்யராஜ் தயங்கிக் கொண்டே நீங்கள் இவ்வளவு வற்புறுத்தி கேட்கிறதுனால நான் ஒன்னே ஒன்னு மட்டும் உங்க கிட்ட கேட்கிறேன் எனக்கு ஒர்க் அவுட் பண்றதுக்கு நீங்க ஒர்க்கவுட் பண்ற ஒரு தம்பிள்ஸ் மட்டும் கொடுங்க என்று கேட்க எம்ஜிஆர் அவருக்கே உரித்தான பாணியில் ஒரு சிரிப்பு சிரித்து விட்டு அதன் பின் கொஞ்ச நேரம் யோசித்து விட்டு வீட்டிற்கு உள்ளே சென்று அவர் பயன்படுத்தும் கர்லாக்கட்டையை எடுத்துக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்தார் சத்தியராஜ் அந்த கர்லா கட்டையை பற்றி இப்பொழுது சொல்லும் போது கூட அது சாதாரண கர்லா கட்டை அல்ல அதை மற்ற யாராலும் அவ்வளவு சீக்கிரமாக தூக்க முடியாது காரணம் அது 25 கிலோ இருக்கும் பட்டிக்காட்டு பொன்னையா படத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அதை பயன்படுத்தியது இப்போதும் என் வீட்டில் அதை மிக பொக்கிஷமாக நான் பாதுகாத்து வருகிறேன் என்று அவர் தன்னுடைய மலரும் நினைவுகளை பற்றி பேசியிருந்தால் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Source :
