காலேஜ் ப்ரொபசரை காதலிக்கும் 17 வயது நடிகை.! ஆனா ட்விஸ்ட்டே இதான்..

இப்போது பிரபலமாக இருக்கும் நடிகை தன் காலேஜில் படித்துக் கொண்டிருக்கும் போது தனக்கும் தன்னுடைய ப்ரொபசருக்கும் நடந்த குட்டி லவ் ஸ்டோரியை மிக ஓப்பனாக பகிர்ந்துள்ளார்..

பிரபல தெலுங்கு நடிகை ராஷி சிங், தான் 17 வயதில் காலேஜ்க்கு சென்றபோதுத் தனக்கும் தனது ப்ரொபஷருக்கும் இடையே மலர்ந்த லவ் பற்றி சொன்னது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தற்போது ‘3 ரோஸஸ்’ சீசன் 2 என்ற வெப் சீரிஸில் நடித்து வரும் ராஷி சிங், அதன் அட்வடேஸ்மன்ட் இன்டர்வியூவில் தன் காலேஜ் டேய்ஸில் கலக்கும் தன் ப்ரொபசருக்கும் இடையே எப்படி காதல் உருவானது என்ற குட்டி லவ் ஸ்டோரியை பற்றி சொல்லியிருக்கிறார்

அப்போது, “எனது கல்லூரி நாட்களில் எனக்கு ஒரு காதலர் இருந்தார். அவர் என் ப்ரொபஷர் அவர் எனக்கு எல்லா உதவிகளையும் செய்தார். கொஸ்ட்டின் பேப்பர்களை முன்கூட்டியே எனக்குக் கொடுப்பார். வைவாவின் போது அவர் என்னிடம் எதுவும் கேட்க மாட்டார். நாங்கள் ஒருவருக்கொருவர் எதிரே அமர்ந்து நேரத்தைக் கடத்துவோம். அப்போது எனக்கு 17 வயது.”

தற்போது அந்தக் காதலர் குறித்துப் பேசிய அவர், “இப்போது அவருக்குத் திருமணமாகி விட்டது. அவர் இன்ஸ்டாகிராமில் என்னைப் பின்தொடர்கிறார்” என்றும் சிரித்தவாறே கூறியுள்ளார். ராஷி சிங் பல தெலுங்கு படங்களில் நடித்திருந்தாலும், தற்போது அவர் பகிர்ந்துள்ள இந்தக் காதல் கதை குறித்த கருத்துக்கள் சினிமா வட்டாரத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் நடிகையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை பாலோ செய்து கொண்டிருக்கும் அந்த காதலன் யார் என்பதை சல்லடை போட்டு சலித்தபடி தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.