புத்தாண்டு 2026: நித்யானந்தாவின் சாட்சி பாவம் ஆலோசனை – புதிய ஆன்மிகப் பிறவிக்கு அழைப்பு.!

சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியான ஸ்ரீ நித்யானந்தா 2026 புத்தாண்டில் மக்களுக்கு தனித்துவமான ஆன்மிக செய்தி வழங்கியுள்ளார். தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், அவர் கூறியதாவது:

“இந்த ஆண்டில் நீங்கள் செய்யவேண்டியது ஒன்றுதான் – சாட்சி பாவம். அனைத்தையும் சாட்சியாகப் பார்க்கத் தொடங்கினால் இந்த புத்தாண்டு உங்களுக்கு ஒரு புதிய பிறவியாக அமையும்.”

பதிவின் முடிவில், நித்யானந்தா தனது பெயரை “பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம்” என குறிப்பிட்டுள்ளார்.

நித்யானந்தா இந்தியாவின் திருவண்ணாமலை பிறந்தவர். கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் மற்றும் பல நாடுகளிலும் ஆன்மிக சொற்பொழிவுகள் மூலம் பிரபலமாகி உள்ளார். ஆனால் பல பாலியல் குற்றச்சாட்டுகளிலும் அவர் சிக்கியுள்ள நிலையில், இந்திய போலீசாரால் தேடப்பட்டு வந்தார். பின்னர் இந்தியாவை விட்டு வெளியேறி, கைலாசா எனும் தீவை உருவாக்கி, அங்கு தனது சீடர்களுடன் வசித்து வருகிறார்.

அதிகமாக பரவிய இறந்துவிட்டதாக செய்திகள் உண்மையல்ல என அவர் மற்றும் அவரது சீடர்கள் நிரூபித்துள்ளனர். மேலும், அவர் தொடர்ந்து உரையாற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

இந்நிலையில், புத்தாண்டு செய்தியாக அவர் மக்களுக்கு வழங்கிய “சாட்சி பாவம்” பற்றிய ஆலோசனை, 2026 ஆண்டை ஒரு புதிய ஆன்மிகப் பிறவியாக மாற்றும் வகையாக கருதப்படுகிறது.